கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் தொழில் ஸ்தானத்தில் குரு இருப்பதால் சமூகத்தில் உங்கள் மதிப்பு, கௌரவம் அதிகரிக்கும். சூரிய பகவானால் வீட்டில் சீரமைப்பு பணிகள் அல்லது தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம்.
சனி பகவானின் ஆதிக்கத்தால் எதிரிகளை எதிர்கொள்வதில் தைரியமும், மன உறுதியும் கிடைக்கும். படைப்பாற்றல் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் புதிய திட்டங்களை தொடங்குவதற்கு சாதகமான வாரமாக இருக்கும்.
நிதி நிலைமை:
செவ்வாய் பகவானால் எதிர்பாராத செலவுகள் அல்லது அத்தியாவசியமற்ற செலவுகள் ஏற்படக்கூடும். நிதி நிர்வாகத்தில் கூடுதல் கவனம் தேவை. பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.
வீட்டுத் தேவைகள் அல்லது தாயின் ஆரோக்கியத்திற்கு கணிசமான தொகையை செலவு செய்ய நேரலாம். நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.
ஆரோக்கியம்:
கேது பகவான் நிலையால் மனச்சோர்வு அல்லது உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தியானம் மற்றும் நடைபயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நான்காம் இடத்தில் உள்ள சூரியனால் மார்பு அல்லது சுவாசக் கோளாறுகள் போன்ற சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். நாள்பட்ட நோய் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நோயின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். கண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கல்வி:
கேது பகவானால் படிப்பில் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. எனவே அட்டவணைப்படி படிக்க வேண்டியது அவசியம். கலை மற்றும் இலக்கியம் சார்ந்து பயிலும் மாணவர்களை கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமானதாக அமையும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
குருவின் பலம் மிகவும் அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைக்கலாம். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக வெளிநாடு அல்லது தொலை தூரங்களில் இருந்து லாபம் அல்லது வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். களத்திர ஸ்தானத்தில் உள்ள ராகுவால் திருமண உறவில் இருப்பவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தேவையில்லாத வாதங்களை தவிர்க்கவும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சுபகிரகங்களால் குழந்தைகளுடன் உறவு வலுப்பெறும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்:
புதன்கிழமைகளில் விநாயகரை வழிபட வேண்டும். ஏழைகள் அல்லது இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. கோயில்களுக்கு தீபம் ஏற்றுவதற்கு எண்ணெயை தானமாக வழங்குவது நேர்மறை பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)