Hans and Malavya Rajyog 2026 benefits in tamil: பிறக்க இருக்கும் 2026 ஆம் ஆண்டில் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ஆகிய இரண்டு மகா புருஷ ராஜயோகங்கள் உருவாக இருக்கின்றன. அது குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் ஐந்து ராஜயோகங்கள் (பஞ்ச மகா புருஷ ராஜயோகங்கள்) விவரிக்கப்படுகிறது. அதில் முக்கியமானதும், சக்தி வாய்ந்ததுமான ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் 2026 ஆம் ஆண்டில் உருவாக இருக்கிறது. குரு பகவான் ஜூன் 2, 2026 அன்று அதன் உச்ச ராசியான கடகத்தில் நுழையும் பொழுது ஹன்ஸ் ராஜயோகமும், சுக்கிர பகவான் அதன் உச்ச ராசியான மீனத்தில் நுழையும் போது மாளவ்ய ராஜயோகமும் உருவாகிறது.
27
மேஷம்
மேஷ ராசிக்கு நான்காம் வீட்டில் ஹன்ஸ் ராஜயோகமும், 12-ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகமும் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு பொன், பொருள், இன்பங்கள் அதிகரிக்கும். சொத்துக்கள், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். வீட்டில் தங்கம், வெள்ளி, நகைகள், ஆபரணங்கள் சேரும். நிதி நிலை கணிசமாக உயரும். வெளிநாட்டு தொடர்புகள் லாபம் தரும்.
37
கடகம்
குரு பகவான் கடக ராசியின் முதல் வீடான ஜென்ம ராசியில் ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்குகிறார். எனவே இந்த காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலைமை கணிசமாக உயரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் காண்பீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் மூலம் வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல வெற்றியும், பதவி உயர்வும் கிடைக்கும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் ரீதியாக லாபத்தை எதிர்பார்க்கலாம். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்கள் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். எடுக்கும் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
57
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். மன அமைதி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.
67
மகரம்
மகர ராசியின் ஏழாம் வீட்டில் ஹன்ஸ் ராஜயோகமும் மூன்றாம் வீட்டில் மாளவ்ய ராஜயோகமும் உருவாகிறது. இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு திருமண உறவுகள் வலுப்பெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வருமானம் உயரும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும்.
77
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் காரணமாக பொன், பொருள், வசதிகளை அனுபவிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆளுமைத் திறன் மேம்படும். தன்னம்பிக்கை உயரும். எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவான் ஆடம்பரங்களை வாரி வழங்குவார். வீடு மராமத்து பணிகளை மேற்கொள்ளுதல் அல்லது புதிய வீடு கட்டுதல் போன்ற வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)