Intha Vara Rasi Palan: ஜனவரி 2026-ன் 3வது வாரம் பஞ்சகிரக யோகத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 20 முதல் வாரம் முடியும் வரை மகர ராசியில் சதுர்கிரக யோகம் நீடிக்கும். ஜனவரி 19 முதல் 25 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்கள் குறித்து காணலாம்.
ஜனவரி 2026-ன் மூன்றாவது வாரம் (ஜனவரி 19 முதல் 25 வரை) மகரத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் இணைவதால் பஞ்சகிரக யோகத்துடன் வாரம் தொடங்குகிறது. ஜனவரி 20-ல் சந்திரன் மகர ராசியில் இருந்து வெளியேறுவதால், வாரத்தின் இறுதியில் மகர ராசியில் சதுர்கிரக யோகம் நீடிக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கும். இந்த நிலையில் அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
213
மேஷம்
இந்த வாரம் சுப நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
313
ரிஷபம்
பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்தில் பங்கு வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். நண்பர்களிடமிருந்து உதவிகள் வரலாம். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
பருவநிலை மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்படலாம். காதல் உறவுகளில் குழப்பம் ஏற்படும். புறம் பேசுவதைத் தவிர்க்கவும். தேவையற்ற வேலைகளில் நேரம் செலவிட வேண்டாம். மாணவர்களுக்கு இந்த 7 நாட்கள் சாதமாக இல்லை. எனவே படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான முதலீடுகள் வேண்டாம்.
513
கடகம்
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு இரண்டும் கிடைக்கலாம். கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்புள்ளது. பண விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும்.
613
சிம்மம்
வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கைநழுவிப் போகலாம். நிதி நெருக்கடியால் நண்பர்களிடம் கடன் வாங்க நேரிடலாம். சில முக்கிய வேலைகள் தடைபடலாம். வேலையில் அதிகாரிகள் அதிருப்தி அடையக்கூடும்.
713
கன்னி
காதலர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். மாறும் வானிலை பாதிப்பை ஏற்படுத்தலாம். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.
813
துலாம்
உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தாய்வழி உறவினர்களிடமிருந்து கெட்ட செய்தி வரலாம். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு பணப் பிரச்சனை வரலாம். வேலையில் தவறான முடிவுகள் வரக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க தாமதமாகலாம்.
913
விருச்சிகம்
காதலை வெளிப்படுத்த சாதகமான வாரமாகும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிறிய உடல்நலப் பிரச்சனைகள் வரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
1013
தனுசு
சட்ட விஷயங்களில் பெரிய வெற்றி கிட்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமானதாக இல்லை. மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். வார இறுதியில் வீட்டில் சண்டை வரலாம். பங்குச் சந்தை முதலீடுகளில் கவனத்துடன் இருங்கள்.
1113
மகரம்
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டகால பிரச்சனை தீரும். காதல் உறவுகள் சிறப்பாக மாறும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பழைய சச்சரவுகள் தீரும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
1213
கும்பம்
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படலாம். பெரிய நஷ்டம் தவிர்க்கப்படும். காதலை வெளிப்படுத்த இந்த வாரம் சாதகமாக இருக்கும். பரம்பரை சொத்து தொடர்பாக நல்ல ணெய்திகள் கிடைக்கும். பகுதி நேர வேலை தேடுபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
1313
மீனம்
இளைஞர்களுக்கு தொழிலில் முன்னேற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் வரலாம். ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)