ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே இதுவரை சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த வாரம் முதல் பனிபோல் விலக இருக்கிறது.
சூரியனும், புதனும் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். குரு பகவான் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார். சனி லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார்.
பொதுவான பலன்கள்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய திருப்பங்கள் கிடைக்கும் வாரமாக இந்த வாரம் அமைய இருக்கிறது. இதுவரை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் விலகி முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றி மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும்.
நிதி நிலைமை:
தன காரகன் குருவின் நிலை காரணமாக இந்த வாரம் பணவரவு சீராக இருக்கும். பிப்ரவரியின் தொடக்கம் பண ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பண உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
வேலை மற்றும் தொழில்:
பணியிடத்தில் உங்களுக்கு புதிய கௌரவம் கிடைக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும். அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வருமானம் அதிகரிக்கும். தொழிலுக்காக கடன் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
தொழில் நிமித்தமாக வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போனஸ் அல்லது சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் இந்த வாரம் இனிமை அதிகரிக்கும். கருத்து வேறுபாடால் பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்றிணைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியத்தில் சிறு சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். சிறிய மருத்துவத்தின் மூலமாகவே அனைத்தும் சரியாகும். கண்கள் மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். போதிய அளவு நீர் அருந்துவதும், நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அவசியம்.
மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமாக நல்ல வாரமாகும். உயர்கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. எனவே முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம். இருப்பினும் சந்திரன் எட்டாம் வீட்டில் மறையும் நாட்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. ஆரோக்கியம் மேம்பட சூரிய பகவானை வழிபடலாம். மதுரை கள்ளழகரை வழிபடுவது மன வலிமையைத் தரும். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த உணவை வழங்குவது தோஷங்களை நீக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)