Weekly Rasi Palan: மேஷ ராசிக்கு இழந்த அனைத்தையும் மீட்டு எடுக்கும் யோகம்.! இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட்.!

Published : Jan 25, 2026, 02:20 PM IST

Weekly Rasi Palan Mesham: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் புதிய உற்சாகத்தையும், சவால்களையும் கலந்து தரும் வாரமாக அமையப் போகிறது. செவ்வாய் பகவான் உச்சம் பெறுவதால் இழுபறியாக இருந்த காரியங்கள் தற்போது நிறைவேறம் தொடங்கும். சூரிய பகவான் கர்ம ஸ்தானத்தில் இருப்பது கௌரவத்தை உயர்த்தும். சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பது நிலையான வருமானத்தைத் தரும்.

பொதுவான பலன்கள்:

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த தடைகள் அனைத்தும் அகலும். உடலும், மனமும் நிம்மதி பெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் ஆகியவை சிலருக்கு நிகழலாம். ஏற்றங்கள் தரும் மாற்றங்கள் கிடைக்கும் வாரமாக இந்த வாரம் இருக்கும்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையைப் பொறுத்தவரை இந்த வாரம் சீராக இருக்கும். பழைய கடன்கள் வசூல் ஆகும். கடன் தொல்லையிலிருந்து தற்காலிகமாக விடுபடுவதற்கான சூழல்கள் உருவாகும். நீங்கள் முன்பு வாங்கிய பங்குகள் அல்லது முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் குடும்பத்தினரை கலந்தாலோசித்து செய்வது நன்மைகளைத் தரும்.

வேலை மற்றும் தொழில்:

தொழிலை விரிவுபடுத்துவதற்கு அல்லது தொழிலை மேம்படுத்த எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கி கடன்கள் கிடைக்கலாம். ஏழரை சனியின் தாக்கம் காரணமாக தொழில் ரீதியான போட்டி, பொறாமைகள் அதிகரிக்கக்கூடும். இருப்பினும் புதிய வாய்ப்புகளும், வருமானத்தை பெருக்குவதற்கான வழிகளும் தேடி வரும்.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் காணப்படும். பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை அடைவார்கள். பட்டம் படித்து முடித்திருக்கும் குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் தொழில் கிடைக்கும். இதனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் வந்து நீங்கலாம். குறிப்பாக உடல் உஷ்ணம், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் வந்து நீங்கும். செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. இரவு நேரங்களில் வாகனத்தில் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கிரகங்களின் சாதகமற்ற நிலை காரணமாக மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். ஞாபக மறதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாலை எழுந்து படிப்பது நல்லது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கூடுதல் உழைப்பை அளிக்க வேண்டும்.

சந்திராஷ்டம நாட்கள்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்திராஷ்டம நாட்கள் இல்லை. எனவே தைரியமாக முக்கிய முடிவுகளை எடுக்கலாம். குறிப்பாக வார இறுதியில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளலாம். எந்த விஷயமாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

பரிகாரங்கள்:

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடுவது பாவங்களை நீக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மைகளைத் தரும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது மனவலிமையை அதிகரிக்கும். அன்னதானம் அல்லது வஸ்திர தானம் செய்வது பலன்களை இரட்டிப்பாக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories