
எண் கணிதத்தின் படி, நான் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியும். மேலும் நமது வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதுவும் குறிப்பாக நாம் பிறந்த தேதியை வைத்து நம்முடைய ஆளுமை மட்டுமல்ல, எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பல உடல்நல பிரச்சனைகளையும் அறிந்து கொள்ளலாம். ஆகவே உங்களது பிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான உடல் நிலை பிரச்சனைகள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண் கணிதத்தின் படி, எண் ஒன்றில் பிறந்தவர்கள் ரொம்பவே சக்தி வாய்ந்த மனநிலை உள்ளவர்கள். 1,10, 19 மற்றும் 28 ஆகிய எண்கள் ஒன்றின் கீழ் வரும். இந்த எண்கள் கொண்ட தேதியில் பிறந்தவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருந்தாலும், சில உடல்நிலை பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக வரும் அது வீட்டு வேலை இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி. எண் கணிதத்தின்படி இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம் உள்ளன. எனவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க அவர்கள் முடிந்தவரை மன அமைதியுடன் இருக்க வேண்டும்.
2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் எண் 2 இன் கீழ் வருவார்கள். இந்த என் சந்திரனுக்கு சொந்தமானது என்பதால் இந்த எண் கொண்டவர்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்படுவார்கள். மேலும் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சில உடல்நிலை பிரச்சினைகளும் வரும். அதுவும் குறிப்பாக சளி, இருமல், அமலத்தன்மை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை அதிகமாக சந்திக்க நேரிடும். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், தொற்று நோய்கள் இவர்கள் எளிதில் தாக்க வாய்ப்பு உள்ளன. மேலும் இவர்கள் ஈரப்பதமான வானிலை மற்றும் காற்று மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துங்கள். இதனால் நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
எண் கணிதத்தின் படி, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் மூன்றின் கீழ் வருவார்கள். எண் 3 வியாழன் கிரகத்தை சேர்ந்தது. ஆகவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சுறுசுறுப்பானவர்கள், மகிழ்ச்சி என ஆளுமை உள்ளவர்கள். ஆனால் இவர்கள் நுரையீரல் பிரச்சனை, ஒவ்வாமை, சிறுநீர் பாதை தொற்று மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளால் எதிர்காலத்தில் அவதிப்படுவார்கள். எனவே இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு சத்தான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இது தவிர உடற்பயிற்சி, யோகா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக எடை அதிகரிப்பதை தவிர்க்க வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எண் கணிதத்தின் படி 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் நான்கு என்ற எண்ணின் கீழ் வருவார்கள். இந்த எண் கொண்டவர்கள் ராகுவை குறிக்கின்றது என்பதால் இவர்கள் வித்தியாசமாக சிந்திப்பார்கள். ஆனால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, சுவாசப் பிரச்சனை, தொண்டை தொற்று போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்காலத்தில் சந்திப்பார்கள். இது தவிர முடி பிரச்சனை வெப்பம் மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களை பாதிக்கும். ஆகவே இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும்.
எண் கணிதத்தின்படி 5, 14 மற்றும் 23 ஐக்கிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் ஐந்தின் கீழ் வருவார்கள். எண் 5 புதனுக்கு சொந்தமானது என்பதால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள், ஆனால் செரிமான பிரச்சனை, தொண்டை புண் போன்ற பிரச்சினைகளாலும் அவதிப்படுவார்கள். ஆகவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க ஆரோக்கியத்தின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
எண் கணிதத்தின் படி 6 ,15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் ஆறின் கீழ் வருவார்கள். இந்த என் சுக்கிரனுக்கு சொந்தமானது என்பதால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அன்பு, அழகு மற்றும் நேர்த்திக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் பாலியல் பிரச்சனை, மாறிவிட பிரச்சனை, கருவுறுதல் பிரச்சனை, தோல் நோய் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளன. இது தவிர ஹார்மோன் மாற்றங்களால் இவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இவர்கள் முடிந்தவரை தங்களது உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மேலும் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்.
எண் கணிதத்தின்படி 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 இன் கீழ் வருவார்கள். இந்த என் கேதுவுடன் தொடர்புடையது என்பதால் இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆன்மீகம் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் உடல் ரீதியாக மன அழுத்தம், நரம்பு பிரச்சனை, கால் வலி , பதட்டம் போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் அவதிப்படுவார்கள். இவற்றை தவிர்க்க, தியானம் மற்றும் நினைவற்றல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எண் கணிதத்தின்படி 8 ,17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 8இன் கீழ் வருவார்கள். இந்த எண் சனி கிரகத்துடன் தொடர்புடையது என்பதால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் இவர்கள் அதிகமான அழுத்தத்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். இது தவிர மூட்டு வலி, தலைவலி மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள். ஆகவே உடலை வலுவாக வைக்க ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இவற்றை நீங்கள் பின்பற்றினால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.