Astrology: பாதையை மாற்றி எதிர் திசையில் நகரும் குரு.! குருவின் வக்கிர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிகள்.!

Published : Oct 06, 2025, 10:36 AM IST

Guru Vakra Peyarchi 2025: நவம்பர் 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசியில் வக்கிரம் அடைவதால் சில ராசிக்காரர்களுக்கு விசேஷமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
17
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025

வேத ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, புகழ், ஆன்மீகம், நல்லொழுக்கம், செல்வம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்போது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. குருபகவான் இந்த ஆண்டின் இறுதியில் மிதுன ராசியில் வக்கிர நிலையில் நகர இருக்கிறார். பொதுவாக குரு பகவான் வக்கிரம் அடையும் பொழுது, அவர் சஞ்சரிக்கும் ராசி மற்றும் அவர் பார்வை படும் ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அளிக்கிறார்.

27
மிதுன ராசியில் வக்கிரம் அடையும் குரு

குருவின் பார்வை படும் ராசிக்காரர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு அல்லது முன்னாள் தடைபட்டிருந்த விஷயங்களை நிறைவேற்றும் வாய்ப்புகளை பெறுகின்றனர். ஆழ்ந்த சிந்தனைக்கும், கடந்த கால முடிவுகளை பரிசீலனை செய்வதற்கும் உகந்த காலத்தை குரு பகவான் அளிக்கிறார். நவம்பர் 11, 2025 கடக ராசியில் இருந்து வக்கிரமடைந்து, டிசம்பர் 5, 2025 மீண்டும் மிதுன ராசிக்கு திரும்பி, மார்ச் 11, 2026 வரை வக்கிர நிலையிலையே பயணிக்கிறார். மிதுன ராசியில் குரு வக்கிரமடையும் பொழுது சில ராசிக்காரர்கள் அதிக பலன்களை பெறுகின்றனர். அது குறித்து இங்கு காணலாம்.

37
துலாம்
  • துலாம் ராசியின் ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் வக்கிரமடைவதால் துலாம் ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெற இருக்கின்றனர். 
  • நீண்ட நாட்களாக திருமணத்தடை இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். 
  • குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். 
  • அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கப்படும். 
  • தந்தை வழியில் இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து அனுகூலம் உண்டாகும். 
  • உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
  • வெளிநாடு தொடர்பான முயற்சிகள் மற்றும் தொழில் ரீதியான பயணம் போன்றவை வெற்றி அடையும். 
  • எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும்.
47
மிதுனம்
  • மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்கிரப்பயணம் மிகவும் சாதகமான சூழலை கொண்டு வரும். 
  • குருபகவான் துலாம் ராசியின் லக்கின வீட்டில் வக்கிர பாதையில் சஞ்சரிக்க இருக்கிறார். எ
  • னவே மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மதிப்பு மரியாதையை பெறுவீர்கள். 
  • செல்வாக்கு மிக்க ஒருவரின் ஆதரவு கிடைக்கும். 
  • வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படும். 
  • சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான நிலைமை கிடைக்கும். 
  • புதிய சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். 
  • நிலம், கட்டிடம், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 
  • குடும்பத்தினுடனான உறவுகள் நன்றாக இருக்கும். 
  • பிரச்சனைகள் அனைத்தும் விலகுவதால் மனம் அமைதி அடையும்.
57
கன்னி
  • கன்னி ராசியின் கர்ம ஸ்தானத்தை கடந்து குரு பகவான் செல்வதால் கன்னி ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 
  • தொழில் மற்றும் வியாபார ஸ்தானத்தில் குருவின் வக்கிர பயணம் நடைபெற இருப்பதால், தொழில் ரீதியான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். 
  • வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 
  • திடீர் லாபங்கள் மற்றும் நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். 
  • சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். 
  • வேலை செய்து வருபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். 
  • தொழில் ரீதியாக அல்லது வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
67
தனுசு
  • தனுசு ராசிக்கு குருவின் வக்கிர பெயர்ச்சியானது ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் நடக்கிறது. 
  • இந்த வீடு கணவன் மனைவி உறவு, கூட்டாண்மை ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். 
  • எனவே இந்த காலத்தில் கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். 
  • குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, இணக்கம் ஏற்படும். 
  • திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். 
  • தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
77
கும்பம்
  • கும்ப ராசிக்கு குருவின் வக்கிரம் ஐந்தாவது இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நடக்க இருக்கிறது. 
  • இந்த இடம் மிகவும் சுபமான இடமாகும். இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிப்பீர்கள். 
  • குழந்தை வரம் எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 
  • பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். 
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். 
  • புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். 
  • பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிக்கல்கள் தீர்ந்து, சொத்துக்கள் வாரிசுகளுக்கு கிடைக்கும். 
  • மனம் மகிழ்ச்சியாக இருக்கும். 
  • நிதி ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
     

வக்கிர காலத்தில் குருபகவான் தனது பார்வையை தீவிரப்படுத்துவார் என்பதால் இந்த ராசிக்காரர்கள் நேர்மையுடனும், தர்ம சிந்தனைகளுடனும் செயல்பட்டால் பல மடங்கு நன்மைகளைப் பெறுவார்கள். இவர்களுக்கு குரு பகவான் வெற்றி பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க இருக்கிறார்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories