துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ஆடம்பரத்தை வாரி வழங்குவார். நல்ல ஆரோக்கியத்துடன், நிதி ஆதாயங்களும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தொழிலதிபர்கள் நிதி நிலைமை மேம்படுவதை கண்கூடாகக் காண்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இருந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். தொழிலில் இருந்த எதிரிகள், போட்டியாளர்கள் விலகுவதால் வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.