Budhan Peyarchi 2025: தெற்கு நோக்கி நகரத் தொடங்கிய புதன்.! டிச.27 முதல் தொழிலில் சாதிக்கப்போகும் ராசிகள்.!

Published : Dec 15, 2025, 01:49 PM IST

Budhan Peyarchi 2025 Rasi Palangal: டிசம்பர் 27, 2025 முதல் புதன் பகவான் தனது திசையை மாற்றி தெற்கு நோக்கி நகர இருக்கிறார். இது மூன்று ராசிகளில் பிறந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக வெற்றியைத் தர இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
புதன் பெயர்ச்சி 2025

புதன் பகவான் “கோள்களின் இளவரசன்” என்று அழைக்கப்படுகிறார். இவர் வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, படிப்பு, அறிவு, பேச்சு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். குறிப்பிட இடைவெளியில் தனது ராசியை மாற்றும் அவர், தனது திசையையும் அவ்வபோது மாற்றுகிறார். டிசம்பர் 27, 2025 அவர் தனது திசையை மாற்றி தெற்கு நோக்கி நகர இருக்கிறார். புதனின் தெற்கு நோக்கிய இயக்கம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு செல்வமும், புகழும் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் திசை மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். புதனின் தெற்கு நோக்கிய இயக்கம் மிதுன ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் மற்றும் பேச்சை மேம்படுத்தும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். தொழில் ரீதியான வெற்றிகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் லாபத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமை வலுப்பெறும். வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

34
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் தெற்கு நோக்கிய பயணம் மிகவும் நன்மை பயக்கும். புத்திசாலித்தனம் மற்றும் திறன்களை கூர்மைப்படுத்தி, முடிவெடுக்கும் திறன் மேம்படும். வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வு காரணமாக பயனடைவீர்கள். வருமான அதிகரிப்பால் தங்கம், வெள்ளி போன்ற திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். வீட்டில் ஆபரணங்கள் சேரும். முதலீடுகள் மற்றும் திட்டங்கள் மூலம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பயணம் எளிதாக இருக்கும். குடும்பத்தினர் நண்பர்களுடன் உறவு சுமூகமாக இருக்கும். வீட்டின் பொருளாதார நிலை வலுப்பெறும். புகழ் அதிகரிக்கும்.

44
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 27 தொடங்கி நல்ல காலம் பிறக்க இருக்கிறது. புதன் பகவானின் செல்வாக்கு காரணமாக தகவல் தொடர்பு திறன் அதிகரிக்கும். மனதில் புதிய தெளிவு பிறக்கும். வணிகம் மற்றும் வேலைவாய்ப்பில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் முதலீடுகள் அதிர்ஷ்டகரமானதாக மாறும். குடும்பம் மற்றும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதிநிலைமை மேம்படும். தொழில் விரிவாக்கம் நடக்கும். புகழ் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories