Guru Peyarchi: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெயரும் குரு பகவான்.! கோடிகளில் புரளும் யோகம் பெறும் 4 ராசிகள்.!

Published : May 24, 2026, 07:00 AM IST

Guru Peyarchi Palangal: குரு பகவான் 12 வருடங்களுக்குப் பிறகு தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இது குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிகபட்ச பலன்களை வாரி வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
Guru Peyarchi Palangal

வேத ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். மிதுன ராசியில் பயணித்து வரும் அவர், விரைவில் தனது ராசியை மாற்ற இருக்கிறார். பாரபவ வருடத்தின், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 26-05-2026 ஆம் ஆண்டு அன்று பகல் 11 மணிக்கு அவர் மிதுன ராசியிலிருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 குருவின் இந்த மாற்றம் நடக்க இருக்கிறது. அவரது விசேஷ பார்வைகளான 5, 7, 9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் விழ உள்ளது. இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!

25
மேஷம்

குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். உங்கள் எண்ணங்கள் ஈடேறக்கூடிய காலகட்டம் நெருங்கியுள்ளது. அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் உங்கள் வேலைகள் எளிதில் முடிவடையும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். வாழ்க்கையில் மேன்மைகள் தரக்கூடிய நிகழ்வுகள் கைகூடிவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். திருமணத் தடைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டு. குழந்தைகளால் பெருமை சேரும். எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றியைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை வழிபடுவது வாழ்க்கையில் மேலும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!

35
மிதுனம்

குரு பகவானின் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். சமூகத்தில் ஏற்பட்ட தலைகுனிவு மாறி, தலை நிமிர்ந்து நடக்கும் காலம் நெருங்கியுள்ளது. வீண் வம்புகள், வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாக குடியேறும். பொன், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த விஷயங்கள் சாதகமாகும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். தொழில் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும்.

பரிகாரம்: மகாலட்சுமி தாயாரை வழிபடுவது அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கும்.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

45
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது. குரு பெயர்ச்சிக்குப் பின்னர் உங்கள் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பமான சூழல்கள் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்னோன்யம் அதிகரிக்கும். குடும்ப வாரிசுகள் விஷயத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: அனுமனை வழிபடுவது ஆனந்தத்தை அதிகரிக்கும்.

Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!

55
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் கிடைக்கும் காலம் நெருங்கியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டைகள் தீரும். எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் இனிமை கூடும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அசையா சொத்துக்களின் சேர்க்கை நடைபெறும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு மேலும் மேலும் நன்மைகள் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது வாழ்வை பிரகாசிக்க செய்யும்.

Read more Photos on
click me!

Recommended Stories