Guru Peyarchi 2025: சில தினங்களில் நடக்கப்போகும் குரு பெயர்ச்சி.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!

Published : Dec 03, 2025, 01:48 PM IST

Guru Peyarchi Rasi Palangal: டிசம்பர் 5, 2025 நடக்கவுள்ள குரு பெயர்ச்சி பற்றியும், அதனால் பலன் பெறும் ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
குரு பெயர்ச்சி 2025

ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். அவரின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப பலன்களை அளிக்கும். டிசம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சியானது வக்ர பெயர்ச்சியாக கருதப்படுகிறது.

வக்ரம் என்பது ஒரு கிரகம் பின்னோக்கி நகரும் நிலையாகும். பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் சஞ்சரிப்பார். டிசம்பர் 5,2025 அன்று வக்ர நிலையில் மீண்டும் மிதுன ராசிக்குள் வருவதால் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்ர நிலை காரணமாக தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றியை ஈட்டுவீர்கள். சகோதரர் வழியிலான உறவுகள் மேம்படும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

35
மிதுனம்

குரு பகவான் உங்கள் ராசியிலேயே (ஜென்ம ராசியில்) வக்ரமாகி மீண்டும் நுழைவதால் உங்களுக்கு சுபமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக ஆதாயம், குழந்தை பாக்கியம், பிள்ளைகள் வழியில் நன்மைகள் ஆகியவை கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

45
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண உறவுகள் பலப்படும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிறைவேறாத கனவுகள் நிறைவேறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த பணம் அல்லது பல வழிகளில் சிக்கி இருந்த பணம் மீண்டும் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories