Guru Peyarchi 2026 Palangal: குரு பகவான் ஜனவரி 30 புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இது 4 ராசிகளுக்கு சுப பலன்களை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜனவரி 30-ம் தேதி நிகழும் குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. குரு பகவான், ஜனவரி 30ல் புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி, ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார். புனர்பூசம் என்பது குருவின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரம் என்பதால், அவர் தனது சுய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது அதன் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் நுழையும்போது சுயசார பலம் பெறுகிறார். இது சில ராசிகளுக்கு சுப காரியங்கள் தடையின்றி நடக்கவும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் வழிவகுக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
25
மேஷம்
மேஷ ராசிக்கு குரு பகவான் சுப பலன்களை அளிப்பார். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். பதவி உயர்வு, புகழ், தன வரவு, அதிக வருமானம் ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். வணிகர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்களைப் பெறுவீர்கள். இதன் மூலம் லாபம் கணிசமாக உயரும்.
35
மிதுனம்
மிதுன ராசிக்கு புனர்பூசம் என்பது அவர்களின் சொந்த நட்சத்திரப் பாதைகளைக் கொண்டது (புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள் மிதுனத்தில் உள்ளன). உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொற்காலம். இதுவரை உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் தேடி வருவார்கள். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். படித்து முடித்தவர்களுக்கு கை நிறைய ஊதியத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தனிப்பட்ட வாழ்க்கை தொழில் வாழ்க்கை இரண்டுமே சிறக்கும்.
சிம்ம ராசிக்கு 10-ம் இடத்தில் குரு சஞ்சரித்தாலும், புனர்பூச நட்சத்திரத்திற்கு மாறுவது தொழில் ரீதியான மாற்றங்களை தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் சாதகமாக அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். அடைய முடியாது என்று நினைத்த விஷயங்களுக்கான கதவுகளும் திறக்கப்படும். புதிய நம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பால் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்.
55
கன்னி
கன்னி ராசிக்கு 9-ம் இடத்தில் (பாக்கிய ஸ்தானம்) குரு அமர்ந்து புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு மிகச்சிறந்த காலம். தந்தை வழியில் இருந்த சொத்து சிக்கல்கள் தீரும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குரு பகவானின் முழு ஆசியும் கன்னி ராசியினருக்கு கிடைக்கும். வாழ்க்கையில் அளவில்லாத மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவிப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)