2025 New Year Rasi Palan, New Year 2025 Rasi Palan
Gemini and Virgo Lucky Zodiac Signs of Lord Ganesha in 2025 : 2024 ஆம் ஆண்டு இன்னும் 7 நாட்களில் முடிந்து 2025ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்த 2025 புத்தாண்டு புதன் கிழமை பிறக்கிறது. புதன் கிழமையானது சிவனின் மகனான் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாளில் விநாயகப் பெருமானின் அருள் கிடைக்கும். புதன் கிழமையில் பிறக்கும் 2025 புத்தாண்டு தினத்தன்று விநாயகப் பெருமானை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம்.
2025 New Year Rasi Palan, New Year 2025 Rasi Palan
புதன் கிழமை பிறக்கும் 2025 புத்தாண்டு ஜோதிட சாஸ்திரப்படி மிதுனம் மற்றும் கன்னி ராசியினருக்கு விநாயகப் பெருமானின் அருள் கிடைக்கும். இதன் மூலமாக இந்த 2 ராசியினரின் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். செல்வம் பெருகும்.
Gemini Rasi 2025 New Year Palan, Wednesday 2025 New Year Rasi Palan
மிதுன ராசி
ஜோதிட சாஸ்திரப்படி குரு 2025ல் தனது ராசியை மாற்றும். குரு ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழையும். மிதுன ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசியை ஆளும் கிரகம் புதன் மற்றும் தெய்வம் கணபதி. வியாபாரத்தின் அதிபதி புதன் என்று கூறப்படுகிறது. எனவே, மிதுன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும், இவர்கள் தொழிலில் வெற்றி பெறலாம். விநாயகர் மற்றும் குரு ஆசியுடன் மிதுன ராசிக்காரர்கள் 2025ல் சகல விதமான மகிழ்ச்சியையும் அடைவார்கள். முழுமையடையாத பணிகள் முடிவடையும். செல்வம் பெருகும். உத்தியோகத்தில் விரும்பிய வேலை கிடைக்கும்.
Virgo 2024 New Year Rasi Palan, Wednesday 2025 New Year Rasi Palan
கன்னி ராசி
தற்போது நிழல் கிரகமான கேது கன்னி ராசியில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவில் இருந்து விடுதலை கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் தொழிலில் வெற்றியைத் தரும். குருவின் அருளால் இவர்களுக்கு பதவி, கௌரவம் உயரும். கன்னி ராசியில் புதன் உச்சமாக இருக்கிறார். இந்த ராசியை ஆளும் கிரகம் புதன். புதன் பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வரும் 2025ல் இவர்களுக்கு விநாயகரின் சிறப்பு அருள் பற்றி தெரியவரும். விநாயகப் பெருமானின் அருளால் இவர்கள் வாழ்வில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். வாழ்க்கை ஒரு புதிய திசையைப் பெறும்.