Zodiac Signs: சிக்கல்களை அசால்டாக கையாளும் 4 ராசிகள்.! இடியாப்ப சிக்கல்களை கூட ஒரே நொடியில் சரி செய்வார்களாம்.!

Published : Oct 06, 2025, 11:18 AM IST

சிலர் எந்த சிக்கலையும் புன்னகையுடனும், தைரியத்துடனும் எதிர்கொள்கின்றனர். ஜோதிடத்தின்படி, சிம்மம், மகரம், மிதுனம், மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் பிரச்சனைகளை ஒரு வாய்ப்பாக கருதி, தங்களின் தனித்துவமான குணங்களால் எளிதில் தீர்வு காண்கிறார்கள். 

PREV
16
முகத்தில் புன்னகை, மனதில் அமைதி, செயல்களில் தைரியம்!

வாழ்க்கை என்பது எப்போதும் சமநிலையில் இருப்பதில்லை. சில நாட்களில் அனைத்தும் எளிதாக நடக்கலாம், சில நாட்களில் சிறிய விஷயங்களுக்கே பெரும் பிரச்சனைகள் உருவாகலாம். ஆனால் சிலர் இருப்பார்கள். எந்த சிக்கலும் வந்தாலும் முகத்தில் புன்னகை, மனதில் அமைதி, செயல்களில் தைரியம்! அவர்கள் சிக்கலைப் பார்த்து பயப்படமாட்டார்கள்; அதைக் “சந்தர்ப்பம்” என்று பார்த்து சிரித்தபடியே தீர்வு காண்பார்கள். ஜோதிட ரீதியாக இத்தகைய குணம் மிக வலிமையாகக் காணப்படும் நான்கு ராசிகள் இருக்கின்றன.

26
சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்கள் என்பது சூரியனின் ஆற்றலுடன் வாழும் தலைமைத் தன்மையுடையவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் தங்களது ஆளுமையால் சுற்றியுள்ளவர்களை கவர்ந்துவிடுவார்கள். சிக்கல் என்றாலே சிலர் தலையை பிடித்துக் கொள்வார்கள், ஆனால் சிம்மராசிக்காரர்கள்  இதை எப்படி தீர்க்கலாம்?” என்ற கேள்வியுடன் அணுகுவார்கள். அவர்களின் தைரியம், தன்னம்பிக்கை, மற்றும் தெளிவான சிந்தனை இவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. கடினமான சூழ்நிலையிலும் அவர்கள் அமைதியாக முடிவெடுப்பார்கள். குடும்பத்திலும், வேலைவாய்ப்பிலும், நண்பர்களிடையிலும் இவர்களே வழிகாட்டி ஆவார்கள். ஒருவேளை இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டால் கூட இவர்களின் மாயக்கை வேலை செய்து அதை திருத்தி விடுவார்கள். “சிக்கல் என்றால் அதற்கே தீர்வு உண்டு” என்பதே இவர்களின் மந்திரம்.

36
மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்கள் யோசித்து நடப்பவர்கள். அவர்களின் ஒழுங்கும் திட்டமிடும் பழக்கமும் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆயுதம். எந்த சிக்கலும் வந்தாலும் அவர்கள் பதறமாட்டார்கள்;. அதற்கான காரணத்தையும் தீர்வையும் ஆராய்வார்கள். இவர்கள் ஒரு ‘பிராப்ளம் சால்வர்’ மாதிரி. வேலை, பணம், குடும்பம், உடல் நலம் என எந்த துறையிலும் சிக்கல் வந்தாலும், நிதானமாக, கட்டுப்பாட்டுடன் தீர்க்கும் திறன் கொண்டவர்கள். மகர ராசிக்காரர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களின் முடிவுகள் ஆழமானவை. சத்தம் இல்லாத வெடிப்புபோல அவர்களின் தீர்வுகள் கண்ணுக்கு தெரியாமல் பலம் கொண்டவை. நண்பர்கள் இவர்களிடம் ஆலோசனை கேட்டால் நிச்சயம் பயன் அடைவார்கள்.

46
மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் புத்திசாலித்தனமும் நகைச்சுவையும் கலந்தவர்கள். எந்த பிரச்சனையும் இவர்களால் சிரிப்பாக மாற்றிவிட முடியும். வாழ்க்கையில் அவர்களுக்கு சிக்கல்கள் புதிய புதிர் போல. அதைத் தீர்க்கும் ஆர்வமே இவர்களின் ஆற்றல். அவர்கள் பேசுவதில் திறமையானவர்கள்,அதனால், சிக்கல் வந்தாலும் சரியான வார்த்தைகளில் அதைத் தீர்த்து விடுவார்கள். சிக்கல்களை சமாளிக்க இவர்களின் ரகசியம் மாற்றத்துக்கு உடனே தங்களை ஏற்படுத்திக் கொள்ளும் திறன். அதனால்தான் மிதுன ராசிக்காரர்களிடம் “Impossible” என்ற வார்த்தை அரிதாகத்தான் வரும். அவர்களின் நகைச்சுவை உணர்வும், நம்பிக்கையும், புதிய யோசனைகள் உருவாக்கும் திறனும் இவர்களை எப்போதும் சிக்கலுக்கு மேலே நிறுத்துகிறது.

56
விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமான சிந்தனையாளர்கள். அவர்கள் எதையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள், ஆனால் உள்ளுக்குள் தீவிரமாக யோசிப்பார்கள். பிரச்சனை வந்தாலே அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் “எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டு” என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதனால்தான் பலர் முடியாதது என்று நினைக்கும் விஷயத்தையும் விருச்சிக ராசிக்காரர்கள் சாதனைபடுத்துவார்கள். அவர்களின் உள் ஆற்றலும் தன்னம்பிக்கையும் மிக வலிமையானது. சிக்கலின் மையத்தில் இருந்தாலும், அவர்களின் மனம் தளராது. மற்றவர்களைக் காப்பாற்றும் திறனும் இவர்களிடம் அதிகம். அவர்கள் ஒருமுறை மனதில் தீர்மானித்தால், அதை நிறைவேற்றாமல் விட மாட்டார்கள். அதனால் அவர்களை எளிதில் வீழ்த்த முடியாது.

66
சிக்கல் என்பது ஒரு சோதனை அல்ல.!

இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சிக்கல் என்பது ஒரு சோதனை அல்ல, ஒரு வாய்ப்பு. அவர்கள் பிரச்சனைகளை சமாளிக்கச் செம்மையாக தெரிந்தவர்கள். மற்றவர்கள் நொந்துக்கொண்டிருக்கும் போது, இவர்கள் சிரித்தபடியே தீர்வு கண்டுபிடிப்பார்கள். வாழ்க்கை அவர்களை எத்தனை தடவைகள் சோதித்தாலும், அவர்கள் மீண்டு எழுவது நிச்சயம். சிக்கல் வந்தால் சிம்மம் போல் இரு, மகரம் போல் நிதானமாயிரு, மிதுனம் போல் யோசி, விருச்சிகம் போல் முடிவெடு அப்போ எந்த சிக்கலும் உன்னை வெல்லாது என்கின்றனர் ஜோதிடர்கள்.!

Read more Photos on
click me!

Recommended Stories