February 2026 Rasi Palan: ஜனவரி 29 முதல் 31 வரை செவ்வாய், குரு, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் நட்சத்திரத்தை மாற்ற இருக்கின்றனர். இது 7 ராசிகளுக்கு சுப பலன்களை வழங்க இருக்கிறது. அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
ஜனவரி 29-ல் செவ்வாய் பகவான் உத்திராட நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி திருவோண நட்சத்திரத்தில் நுழைகிறார்.
ஜனவரி 30-ல் குரு பகவான், புனர்பூச நட்சத்திரத்தின் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்.
ஜனவரி 31-ல் புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நாளில் அவிட்ட நட்சத்திரத்திற்கு மாறுகின்றனர்.
இந்த கிரகங்களின் சஞ்சாரம் 7 ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும்.
28
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த மூன்று நாட்கள் மிகவும் நன்மை தரும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதுவரை நீடித்து வந்த நிதி சிக்கல்கள், கடன் சுமைகள் தீர்ந்து மன அமைதி கிடைக்கும். குடும்பம் மற்றும் காதல் உறவுகளில் சமநிலை இருக்கும். வேலை அல்லது தொழிலில் உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
38
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் முன்னேற்றத்தை தர இருக்கிறது. கல்வி, தொழில் மற்றும் வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி சாத்தியமாகும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவுகளில் இருந்த தகராறுகள் தீர்க்கப்படும். காதல் உறவுகள் இனிமையாகும். வாழ்க்கையில் புதிய ஆற்றலும், உற்சாகமும் பிறக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப ஆதரவு கிடைக்கும். வீட்டுச்சூழல் இனிமையானதாக மாறும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த குறைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும்.
58
சிம்மம்
இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மரியாதையையும், முன்னேற்றத்தைத் தரும். வருமானத்திற்கு புதிய வழிகள் திறக்கப்படலாம். உறவுகள் வலுப்பெறும். மாணவர்களுக்கு கல்வியில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவு வலுப்பெறும்.
68
கன்னி
நன்கு சிந்தித்து முடிவெடுக்க இது நல்ல நேரம். வேலையில் முன்னேற்றம் காணப்படும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். முதலீடு சார்ந்து எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.
78
தனுசு
இந்த நேரம் அதிர்ஷ்டத்தைத் தரும். தொழில் வாழ்வில் ஸ்திரத்தன்மை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக மாறும். இதுவரை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். அரசு வேலைக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
88
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். முதலீடுகள் லாபம் தரும். குடும்ப ஆதரவுடன் மனதளவில் வலிமை பெறுவீர்கள். பரம்பரை அல்லது மூதாதையர் சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி பாகப்பிரிவினை நடக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)