
தனுசு ராசி என்பது வெறும் ஜோதிட ராசி மட்டுமல்ல. அது அறிவு, ஆன்மீகம், உயர்ந்த லட்சியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. தனுசு ராசியில் பிறந்தவர்கள் பிறரைக் காட்டிலும் வித்தியாசமான மனப்பான்மையுடன் இருப்பார்கள். உண்மையைத் தேடும் குணம், அநீதியை சகித்துக் கொள்ளாத மனம், மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்கிற எண்ணம் ஆகிய சிந்தனைகள் இவர்களுக்கு சிறுவயதிலிருந்தே அதிகமாக இருக்கும். தனுசு ராசியின் பிறப்பின் ரகசியம் குறித்து சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் - 30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!
தனுசு ராசியின் அடையாளம் பாதியளவு மனிதன், பாதியளவு குதிரை, கையில் வில்லை ஏந்தி இருப்பதாகும். அம்பு என்பது எப்போதும் இலக்கை நோக்கி பாயக்கூடியது. தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களின் முற்பிறவி தொடர்பால் ஏதேனும் உயரிய ஆன்மீக அல்லது தர்ம காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த பூமியில் அவதரித்திருக்கிறார்கள். பாம்பாட்டி சித்தரின் கருத்துப்படி தனுசு ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே ஆறாம் அறிவு மற்றும் உள்ளுணர்வு மிகக் கூர்மையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் - பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.! 4 ராசிக்காரர்களுக்கு குபேர ஐஸ்வர்யத்துடன் அடிக்கும் ஜாக்பாட்.!
பாம்பாட்டி சித்தர் குறிப்பிடும் குண்டலினி யோகத்தின் விழிப்புணர்வு இவர்களுடன் மறைமுகமாக வாழ்கிறது. பாம்பை ஆட்டுவிப்பது போல தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஞானத்தை பெறுவதே இவர்களின் பிறவிப் பயன். விஷப்பாம்பின் தன்மையை அறிந்த பாம்பாட்டி சித்தரை போல தனுசு ராசியினரும் தங்களை சுற்றி இருப்பவர்களின் பொய் மற்றும் சூழ்ச்சிகளை எளிதாக உணர்ந்து கொள்வார்கள்.
இதையும் படியுங்கள் - தமிழக கோயில்களில் 8000+ பணியிடங்கள்.! தகுதிகள் மற்றும் கடைசி தேதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
தனுசு ராசி என்பது கால புருஷ தத்துவத்தின்படி 9-வது வீடாகும். 9-வது வீடு என்பது பாக்கிய ஸ்தானம், தர்மம் மற்றும் குருவின் அருளைக் கொண்ட வீடாகும். முற்பிறவியில் செய்த நற்பலன்களின் பலனாகவே இவர்களுக்கு இந்த பிறவியில் தனுசு ராசியில் பிறக்கும் பிறவி கிடைக்கிறது. எப்போதும் தர்மத்தின் பக்கம் நின்று பிறருக்கு வழிகாட்டும் குருவாக நல்ல நண்பர்களாக திகழ்வது இவர்களின் பிறவி ரகசியமாகும். வாழ்க்கையில் இவர்கள் சந்திக்கும் போராட்டங்களும், கஷ்டங்களும் இவர்களை வீழ்த்துவதற்காக அல்ல. இவர்களுக்குள் இருக்கும் ஞானத்தை வெளிக்கொண்டு வருவதற்காகவே என்று சித்தர்களால் விவரிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் - ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!
தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஆரம்பம் முதல் பல சோதனைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் கடந்து வெற்றிகளைப் பெறுவார்கள். இது அவர்களின் மன உறுதியை வளர்க்கும் ஒரு பயிற்சி ஆகும். சிறுவயதில் தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மாறுபட்ட எண்ணங்களை கொண்டிருப்பார்கள். பிறர் செல்லும் பாதையை விட தாங்களாகவே புதிய பாதையை தேர்ந்தெடுப்பார்கள். பல நேரங்களில் தனிமையை உணர்வார்கள். மற்றவர்கள் தங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தமும் ஏற்படும். சில சமயங்களில் தாங்கள் செய்த நன்மைக்கு எதிராக பழயையும், பாவத்தையும் அனுபவிக்க நேரிடலாம். ஆனால் இதன் பின்னர் அவர்கள் வலிமையான மனிதர்களாக மாறுகின்றனர்.
இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கடினமாக உழைத்தும் பாராட்டு கிடைக்காமல் இருக்கலாம். சிலர் தங்களை விட குறைவாக உழைத்தும் உயர்ந்த நிலையை அடைவதை பார்த்து மனதில் ஏமாற்றம் ஏற்படும். நான் மட்டும் ஏன் இவ்வளவு போராட வேண்டும் என்ற கேள்வியும் எழும். ஆனால் தனுசு ராசிக்காரர்கள் பொறுமையை இழக்காமல் இருந்தால் உழைப்பால் உயர முடியும். ஒரு மரம் உயரமாக வளர வேண்டும் என்றால் அதன் வேர் ஆழமாக ஊன்ற வேண்டும். வேர் ஆழமாக இல்லாமல் உயரே வளர்ந்த மரம் சிறிய காற்றுக்கே சாய்ந்து விடும். அதுபோல வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டி தனுசு ராசிக்காரர்களுக்கு இறைவன் இது போன்ற மன உறுதியை உருவாக்குவதாக சித்தர்கள் கூறுகின்றனர்.
தனுசு ராசிக்காரர்கள் எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நிற்கும் மன உறுதி கொண்டவர்கள் தோல்வி காரணமாக சில நாட்கள் விழுந்து கிடப்பார்கள். ஆனால் நீண்ட நாட்கள் அவர்களை கீழே வைத்திருக்க முடியாது. ஒரு கட்டத்தில் மனத்தை தேற்றிக்கொண்டு புதிய முயற்சியை தொடங்கி விடுவார்கள். இதுவே அவர்களின் மிகப்பெரிய பலம். தனுசு ராசிக்காரர்கள் தோல்வியை பாடமாக ஏற்றுக் கொண்டு மேலும் முயற்சி செய்து வெற்றியை பெறுவார்கள். பொறுமை, நேர்மை, விடா முயற்சி, இறை நம்பிக்கை ஆகியவற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு தனுசு ராசிக்காரர்கள் முன்னேறிச் செல்வார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதை தங்கள் வாழ்க்கையின் படிகற்களாக மாற்றுவார்கள்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் பதஞ்சலி மகரிஷி மற்றும் பாம்பாட்டி சித்தர் போன்ற சித்தர்களை உபசானை செய்வதும், சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுவதும் வாழ்வில் வரும் தடைகளை நீக்கி பெரும் பலன்களை தரும். நாக தேவதைகளுக்கு மற்றும் ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது இவர்களின் கர்ம வினைகளை குறைக்கும். ஏழை மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பது, எழுது பொருட்களை வாங்கிக் கொடுப்பது, கல்வி கட்டணத்திற்கு உதவி செய்வது, அறிவை பகிர்ந்து கொள்வது ஆகியவை இறைவனுக்கே செய்யும் சேவையாக மாறும். வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள் என்பது வெறும் சடங்காக இருக்கக் கூடாது. தூய்மையில்லாத மனதால் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் முழுமையான பலன்களை அளிக்காது. எனவே தனுசு ராசிக்காரர்கள் உண்மையான பக்தியுடன் நல்ல எண்ணங்களுடன் வாழ்வதே மிகப்பெரிய பரிகாரமாகும்.