December 2025 Mithuna Rasi Palangal: மிதுன ராசி நேயர்களே.! இந்த மாதம் ரொம்ப சுமார் தான்.! இந்த 3 விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை.!

Published : Dec 01, 2025, 04:22 PM IST

This Month Rasi Palan: டிசம்பர் 2025 மிதுன ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
டிசம்பர் மாத கிரக நிலைகள்:

சூரியன்: மாதத்தின் இரண்டாம் பாதியில் களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பார்.

சுக்கிரன்: ஆறாம் வீடான நோய், கடன் மற்றும் எதிரிகளின் வீட்டில் சஞ்சரிப்பார்.

செவ்வாய்: ஒன்பதாவது வீடான அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இது நன்மையைக் கொடுக்கும்.

குரு: 12 ஆம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இது சுப விரயங்கள் மற்றும் அலைச்சலைக் குறிக்கும்.

சனி: ஒன்பதாவது வீடான தந்தை, அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீக இடத்தில் சஞ்சரிக்கிறார்.

பொதுவான பலன்கள்:

டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு சராசரியான பலன்களைக் கொடுக்கும். குறிப்பாக சூரியன் மற்றும் புதனின் சஞ்சாரம் காரணமாக திருமண வாழ்க்கை மற்றும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். 

முதல் பாதியில் எதிரிகளை சமாளிப்பது, கடன்களை நிர்வாகிப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது முக்கியமாகும். மாதத்தில் இரண்டாம் பாதியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் நிதானம் தேவை. சனி மற்றும் செவ்வாய் நிலை அவ்வப்போது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

நிதி நிலைமை:

அதிர்ஷ்ட ஸ்தானத்தில் உள்ள சனி மற்றும் செவ்வாய் காரணமாக எதிர்பாராத நிதி உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் முதலீடு செய்த பணம் திரும்ப வரலாம். 12-ஆம் இடத்தில் உள்ள குரு மற்றும் ஆறாம் இடத்தில் உள்ள சுக்கிரன் காரணமாக மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். சுப விரயங்களும் ஏற்படலாம். மாதத்தின் முதல் பகுதியில் கடன்களை சமாளிக்கும் சக்தி அதிகமாக இருக்கும். கடன்களை அடைக்க புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.

தொழில் மற்றும் வேலை:

ராகு பகவானின் நிலை காரணமாக வேலையிடத்தில் பணி அழுத்தம் ஏற்படலாம் அல்லது பணியில் திருப்தியின்மை இருக்கலாம். இருப்பினும் உங்கள் அறிவுக் கூர்மை மற்றும் பேச்சாற்றலால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். சூரியன் மற்றும் புதனின் சஞ்சாரம் காரணமாக கூட்டாளிகளுடன் தொழில் சார்ந்த முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

கேது பகவானின் சஞ்சாரம் காரணமாக படிப்பில் சிறு தடைகள், கவனச் சிதறல்கள் ஏற்படலாம். மாதத்தின் முதல் பாதி நல்ல பலனைக் கொடுக்கும். உங்கள் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழுவாக படிப்பதை தவிர்த்து தனிப்பட்ட படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

ஆறாம் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வயிறு சார்ந்த பிரச்சனைகள், தோல் அலர்ஜி, சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாயின் பார்வை காரணமாக மூட்டுகளில் வலி, முழங்கால் வலிகள் ஏற்படலாம். நீண்ட நாள் நோய் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உடற்பயிற்சி, தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

குடும்ப உறவுகள்:

ஏழாம் இடத்தில் உள்ள சூரியன் மற்றும் புதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே ஈகோ மோதல்கள் மற்றும் வார்த்தை சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேச்சில் நிதானம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே பேசும் பொழுது மரியாதையுடன் பேசுவது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படலாம். புதிய நட்புகளை உருவாக்கும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பரிகாரங்கள்:

புதன்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும். பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நற்பலன்களை அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் கடன் பிரச்சனைகளை சமாளிக்க அருகில் உள்ள அம்மன் ஆலயங்களில் செவ்வாய் தோறும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. எளியவர்களுக்கு உதவுவது அன்னதானம் செய்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories