சூரியன்: சூரியன் மாதத் தொடக்கத்தில் எட்டாம் வீட்டில் சஞ்சரித்து, டிசம்பர் 16 ஆம் தேதி 9வது வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய்: மாதத் தொடக்கத்தில் எட்டாம் வீட்டில் சஞ்சரித்து, டிசம்பர் 7ஆம் தேதிக்கு பின்னர் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு: மூன்றாம் வீட்டில் வக்ர கதியில் சஞ்சரிப்பது தகவல் தொடர்பு, ஆவணங்கள், பயண முடிவுகளை இருமுறை சரிபார்க்க வேண்டிய அவசியத்தை குறிக்கிறது.
சனி: மாதம் முழுவதும் 12 ஆம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது ஒழுக்கத்தையும், நீண்டகால வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் அமைக்கும்.
பொதுவான பலன்கள்:
மாதத்தின் முற்பகுதியில் எட்டாம் வீட்டில் பல கிரகங்கள் இருப்பதால் சற்று உணர்வுப்பூர்வமான சவால்கள், மறைமுக பிரச்சனைகளை கையாளுதல் மற்றும் திட்டமிடுதலுக்கான காலமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் ஒன்பதாம் வீட்டில் கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது அதிர்ஷ்டம் சாதகமாக மாறும். நீண்ட தூர பயணம், உயர்கல்விக்கான வாய்ப்புகள், தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் விரிவாக்கம் நிகழக்கூடும். உங்கள் தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும்.
நிதி நிலைமை:
இந்த மாதம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன்களை அடைக்க கூடிய சூழல் உருவாகும். சனியின் சஞ்சாரம் நிதி விவகாரங்களில் கட்டுப்பாடையும், ஒழுக்கத்தையும் கொடுக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் தனுசு ராசிக்கு மாறுவதால் முதலீடுகள் மூலம் அதிர்ஷ்டம் வர வாய்ப்புள்ளது. நிலம் அல்லது ஆக்கபூர்வமான விஷயங்கள் மூலம் லாபம் கிடைக்கலாம். இருப்பினும் மாதத்தின் நடுப்பகுதியில் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் வேலை:
மாதத்தின் இரண்டாம் பாதி அதிக சாதகமாக இருக்கும். உங்கள் தலைமைப் பண்பும், துணிச்சலும் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சுறுசுறுப்பாகவும் அதே சமயம் வேலைப்பளு நிறைந்ததாகவும் இருக்கும். அனைத்தையும் முடித்துக் காட்டி நற்பெயர் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களைக் கொடுக்கும். முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் சிறப்பாக இருக்கும்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
ஐந்தாம் வீட்டில் கேது இருப்பதால் மாணவர்கள் கடினமான சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். குருவின் நிலை காரணமாக ஆவணங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் அதிர்ஷ்ட ஸ்தானத்தின் பலத்தால் உயர்கல்விக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கலாம்.
ஆரோக்கியம்: டிசம்பர் 16க்கு பிறகு சூரியனின் சஞ்சாரம் உற்சாகத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செவ்வாய் பகவான் ஆற்றலைக் கொடுத்தாலும் அவசரமான அசைவுகளால் சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். இந்த மாதம் உடல் ஆரோக்கியம் மேம்படும். சீரான உணவு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது பலன்களைத் தரும்.
குடும்ப உறவுகள்:
மாதத்தின் தொடக்கத்தில் குடும்ப உறவுகளில் உணர்ச்சி ரீதியான ஆழம் அல்லது தீவிரமான உரையாடல் இருக்கலாம். இது கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தலாம். டிசம்பர் 20-க்கு பின்னர் உறவுகளில் பாசம், அரவணைப்பு, உற்சாகம் அதிகரிக்கும். துணையின் ஆலோசனை உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
பரிகாரங்கள்:
முருகப்பெருமானை வணங்குவது நன்மைகளைத் தரும். வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் முருகப்பெருமானை வணங்குவது மிகவும் நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடுவது தடைகளை நீக்க உதவும். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)