சூரியன்: மாதத்தின் முற்பகுதியில் ஏழாம் வீட்டிலும், பிற்பகுதியில் எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.
சுக்கிரன்: மாதத்தின் தொடக்கத்தில் ஏழாம் வீட்டில் சஞ்சரித்து, பின்னர் எட்டாம் வீட்டிற்கு மாற இருக்கிறார்.
செவ்வாய்: ஏழாம் இடத்தில் (கணவன்/ மனைவி, தொழில் கூட்டாளிகள் இடம்) ஆட்சி பெற்று வலுவாக இருக்கிறார்.
குரு: தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.
சனி: பத்தாம் வீடான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
பொதுவான பலன்கள்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். மனதில் இருந்த தயக்கங்கள் நீங்கி துணிச்சல் அதிகரிக்கும். நீண்ட காலமாக செய்து வந்த கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். முடிக்கப்படாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் திறமையும், உழைப்பும் பாராட்டப்படும்.
நிதி நிலைமை:
வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் செலவுகளையும் சந்திக்க நேரிடும் என்பதால் நிதி விஷயங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கையிருப்பு குறைய வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நிதி விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் வேலை:
பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். லாபம் கூடும். தொழில் விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. தொழில் நிமித்தமாக வெளிநாடு அல்லது வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
கல்வி தொடர்பான விஷயங்களில் கடின உழைப்பு தேவைப்படலாம். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உயர்கல்வி அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டும்.
ஆரோக்கியம்: உடல் நலனில் அதிக கவனம் தேவைப்படும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்து போதுமான ஓய்வெடுப்பது அவசியம். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவைப்படும். சிறிய ஆரோக்கியப் பிரச்சனைகள் மன அழுத்தத்தை கொடுக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இழுபறியாக இருந்த பல பிரச்சனைகள் தீர்ந்து நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடியும். சில சமயங்களில் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்க கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புள்ளது.
பரிகாரங்கள்:
இந்த மாதம் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு தாமரை மலர்கள் சமர்ப்பித்தும், நெய் தீபம் ஏற்றியும் வழிபடுவது நிதி நிலைமையை சீராக்க உதவும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் சனி ஆகியோருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். கோயிலில் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)