Weekly Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.! ரொம்ப கவனமா இருங்க.!

Published : Dec 14, 2025, 03:33 PM IST

Mithuna Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
வார ராசிப்பலன்கள் - மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஏழாம் வீட்டில் மூன்று முக்கிய கிரகங்கள் சஞ்சரிப்பதால் உறவுகள் மற்றும் தொழில் கூட்டாளிகள் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் தேவை. 

எட்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால், எதிர்பாராத தடைகள், தாமதங்கள் மற்றும் திடீர் செலவுகளுக்கு வழி வகுக்கலாம். எனவே பொறுமை அவசியம். தந்தை வழி உறவில் பிணக்குகள் அல்லது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம்.

நிதி நிலைமை:

விரய ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் எதிர்பாராத அல்லது தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவால் லாபம் ஈட்ட முயற்சிப்பீர்கள். இருப்பினும் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம். கூட்டாக தொழில் செய்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். எனவே ஒப்பந்தங்களை கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியம்:

செவ்வாய் பகவானின் நிலை காரணமாக வாகனம் ஓட்டும் பொழுதும், எந்திரங்களை கையாளும் பொழுதும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விபத்துக்கள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிறு உபாதைகள், செரிமானக் கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கலாம். வேலை அல்லது குடும்ப சுமையால் சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கல்வி:

கேதுவின் நிலை காரணமாக மாணவர்களுக்கு படிப்பில் கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாடங்களை புரிந்து கொள்வதில் சவால்களை சந்திக்க நேரிடலாம். சனி பகவானின் நிலை காரணமாக படிப்பில் தாமதம் அல்லது தடைகள் ஏற்படலாம். பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம்.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலையில் இருப்பவர்கள் தங்கள் பேச்சுத் திறமை மற்றும் பணி செய்யும் திறமையால் நல்ல பெயரை எடுப்பீர்கள். இருப்பினும் பணியிடத்தில் சில சவால்களும், வேலைப்பளுவும் இருக்கும். தொழில் முனைவோர்கள் ஒப்பந்தங்களை முடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய கூட்டாளிகளை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் உங்கள் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்க தாமதம் ஏற்படலாம்.

குடும்ப உறவுகள்:

ஏழாம் வீட்டில் சில கிரகங்கள் இருப்பதால் துணையுடன் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை நினைத்து வேண்டிக் கொள்வது தடைகளை நீக்கும். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் அல்லது ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது அஷ்டம சனியால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories