Weekly Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் நல்ல செய்தி கிடைக்கும்.! என்னனு தெரியுமா?

Published : Dec 14, 2025, 02:41 PM IST

Mesha Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
இந்த வார ராசி பலன்கள் - மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் சமூக நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். 

ராகு பகவானின் சஞ்சாரம் காரணமாக முடிவுகள் எடுப்பதில் அவசரம் அல்லது குழப்பத்தை தவிர்க்க வேண்டும். சுக்கிரன் மற்றும் குருவின் நிலை காரணமாக தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் குரு மற்றும் சனி ஆகியோர் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். பல்வேறு மூலங்களிலிருந்து வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

முதலீடுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். வழக்குகள் அல்லது நீண்ட காலமாக நிலுவை உள்ள பணம் இந்த வாரம் வந்து சேர வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்:

சில நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கிய சீராக இருக்கும். ராகு பகவானின் நிலை காரணமாக அதிகப்படியான சிந்தனை, மன அழுத்தம், தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஓய்வு அவசியம். கவனக்குறைவால் ஏற்படும் சிறு காயங்களை தவிர்க்க, அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். குறிப்பாக உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதிக பலன்களைப் பெறுவீர்கள். புதன் பகவானின் நிலை காரணமாக தொலைதூர கல்வி பயில்பவர்களுக்கு சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கடின உழைப்புக்கான வெற்றிகள் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருப்பதால் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் கூட்டாளிகள் கிடைக்கலாம். ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த நல்ல நேரமாகும். உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையான உரையாடல் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர, சகோதரிகளுடன் நல்லுறவு நீடிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. எனவே நிதானமாக செயல்படவும்.

பரிகாரம்:

சூரிய நமஸ்காரம் செய்வது சூரியனுக்கு உரிய மந்திரங்களை கூறுவது அதிர்ஷ்டத்தை அளிக்கும். முருகப்பெருமான் அல்லது துர்க்கை அம்மன் ஆலயங்களின் நெய் தீபம் ஏற்றுவது நல்ல பலன்களைத் தரும். விநாயகரை வழிபடுவது, விநாயகர் அகவல் பாராயணம் செய்வது நன்மை பயக்கும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற்பலன்களைக் கூட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories