ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் குருவின் நிலையால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்கள் திட்டங்கள் பலனளிக்கத் தொடங்கும். குடும்ப விஷயங்களில் சிறு சிறு சலப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அமைதியாக கையாளவும். வாரத்தின் நடுப்பகுதியில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
நிதி நிலைமை:
லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். 12-ம் வீட்டில் கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக மருத்துவம், பயணம், முதலீடுகள் தொடர்பாக விரயச் செலவுகள் அதிகரிக்கலாம். நீண்ட கால முதலீடுகளைத் தொடங்க உகந்த நேரமாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து பலன் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியம்:
இந்த வாரம் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும். ஆனால் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். சூரியன் மற்றும் சுக்கிரனின் நிலை காரணமாக சிறு உடல் உபாதைகள், செரிமானப் பிரச்சனைகள் அல்லது மறைமுக உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. சீரான உணவுப் பழக்கம், போதுமான ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்.
கல்வி:
அதிர்ஷ்ட ஸ்தானத்தில் புதன் பகவான் இருப்பதால் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். ஆழமாக படிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் ஸ்தானத்தில் கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஊதிய உயர்வு தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அல்லது கூட்டாண்மைகளை உறுதி செய்ய நல்ல நேரமாகும். வெளிநாடு தொடர்பான தொழில்கள் சிறக்கும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாரத்தின் நடுப்பகுதியில் உறவுகள் சீராக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் இந்த வாரம் கிடைக்கலாம்.
பரிகாரம்:
மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நல்லது. அன்னைக்கு நெய் தீபம் ஏற்றி, தாமரை மலர்கள் சமர்ப்பித்து வழிபட கடன் பிரச்சினைகள் தீரும். “ஓம் நமோ நாராயணாய:” மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிக்கலாம். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)