ஜூன் 22, இன்றைய ராசி பலன்கள் : முதலீடு செய்ய ஏற்ற நாள், யாருக்கெல்லாம் தெரியுமா?!

Published : Jun 22, 2025, 12:23 AM IST

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு நற்பலன்களை கணிக்கின்றன. தொழில், குடும்பம், நிதி, மற்றும் ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களையும், வழிபாட்டு முறைகளையும் இங்கே காணலாம்.

PREV
112
மேஷம் (Aries): புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்

உதவி என்று கேட்பவர்களுக்கு இருப்பதை எல்லாம் கொடுக்கும் மேஷ ராசியினரே, இந்த நாள் உங்களுக்கு எதிர்பாராத பல்வேறு நல்ல செய்திகளை அள்ளித்தரும். நீண்ட காலமாக வேலை தொடர்பாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு சாதகமான செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொட்டது துலங்கும் நாள். மனநலம் மேம்படும், நிம்மதியான மனநிலை கிட்டும். உடல் சோர்வு வரக்கூடும் என்பதால் கட்டிப்பாக ஓய்வும் தேவை. தமிழ் கடவுள் முருகனை வழிபட்டால் கிடைக்கும் வெற்றிகளும், மகிழ்ச்சியும் பல மடங்கு அதிகரிக்கும். முருகனின் தந்தையான சிவனுக்கும் அபிஷேகம் செய்தால் நல்ல பலன்களை பெறலாம். செவ்வாய்க்கு உரிய ஹோமங்கள், அர்ச்சனைகள் செய்யலாம். நிலம் தொடர்பான முதலீடுகள் நன்மை தரும்.

212
ரிஷபம் (Taurus): பண வரவை பெருக்கும் நாள்

அதிகாரத்திற்கு அடிபணியாத குணம் கொண்ட ரிஷப ராசிகாரர்களே இன்று உங்களுக்கு பண வரவை பெருக்கும் நாள் என்பதால் அதனை நற்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். தேங்கி கிடக்கும் பழைய ஒப்பந்தங்களை தூசி தட்டி எடுத்து முயன்றால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிதானமான அணுகுமுறை தேவை. முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாடு உங்களை நிம்மதியாக வைத்திருக்க உதவும். வெள்ளை வஸ்திரம் அணிந்து சுக்கிரனை வழிபட்டால் செய்யும் பரிகாரம் எல்லாம் சிறப்பாக அமையும். முதலீடுகளுக்கு இன்று நல்ல நாள். ஆதாயத்தை அள்ளிக்கொடுக்கும் நாள்.

312
மிதுனம் (Gemini): வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்

இளகிய மனதை உடைய மிதுனராசிகாரர்களே இன்று உங்களுக்கு புதிய புதிய சிந்தனைகள் உருவாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தர்மசாஸ்தா வழிபாடு பயனளிக்கும். புதனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபட்டால் கேட்டது கிடைக்கும். டிஜிட்டல் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

412
கடகம் (Cancer): எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கக்கூடும்

நேர்மை குணம் கொண்ட கடகராசியினரே, இன்று உங்களுக்கு கண்டிப்பாக நிதானம் தேவைப்படும் நாள். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செலவு செய்யவும். ஆரோக்கியத்தில் சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சந்திராஷ்டமம் நாளாக இருப்பதால், எந்த பெரிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். துர்கை வழிபாடு சீரான நிலையைத் தரும். சந்திர பகவானுக்கு பால் அபிஷேகம் செய்வது பரிகாரமாக அமையும். முதலீடுகளை தவிர்க்கவும்.

512
சிம்மம் (Leo): பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு

எல்லோரையும் வழிநடத்தும் குணம் கொண்ட சிம்ம ராசியினரே, இன்று உங்களுக்கு செய்யும் எல்லா செயல்களிலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பண வரத்து சீராக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்பாதல் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நரசிம்மர் வழிபாடு ஆற்றலையும் தன்நம்பிக்கையையும் தரும். சூரியன் வழிபாடு பக்கபலமாக இருக்கும். நிலம் தொடர்பான முதலீடுகள் நல்லது.

612
கன்னி (Virgo): நிச்சயமாக வெற்றி கிடைக்கும்

நல்ல மனதுடைய நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் உங்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். கல்வி, போட்டித் தேர்வுகளில் சாதனை காணலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு அறிவுத்திறனை மேலும் ஊக்குவிக்கும். புதனுக்கு பச்சை வஸ்திரம் தானம் செய்யலாம். கல்வி சார்ந்த முதலீடுகள் நன்மை தரும்.

712
துலாம் (Libra): பணிச்சுமை அதிகமாக இருக்கும்

எதையும் சரியாக எடைபோடும் ஆற்றல் உடைய உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் நிதானமாக அணுகினால் வெற்றி உண்டு. குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்லவும். பரசுராமர் வழிபாடு அமைதியையும் சந்தோஷத்தையும் தரும். வெள்ளை பூவில் சுக்கிரனை வழிபட பரிகாரம் நன்மை தரும். இன்று புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

812
விருச்சிகம் (Scorpio): நீங்கள் முன்னேற்றம் காணும் நாள்

அன்புக்கு அடிமையாக இருக்கும் நீங்கள் முன்னேற்றம் காணும் நாள். பழைய முயற்சிகள் வெற்றி பெறும். உடல் சோர்வு வந்தாலும் சமாளிப்பீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்களை உற்சாகமளிக்கும். செவ்வாய்க்கு சிவன் கோவிலில் தீபம் ஏற்ற பரிகாரம் அமையும். தங்கத்தில் முதலீடு நல்லது.

912
தனுசு (Sagittarius): இன்று வாழ்க்கை நிலை மேம்படும்

எதையும் குறிவச்சி அடிக்கும் உங்களுக்கு, இன்று வாழ்க்கை நிலை மேம்படும். ஆன்மீக விருப்பம் அதிகரிக்கும். ஆலைய வழிபாட்டை விரும்புவீர்கள்.வேலை வாய்ப்புகள் உருவாகும். வாமனரைக் கும்பிட்டு வழிபடலாம். குரு பகவானுக்கான பூஜைகள், மஞ்சள் தீபம் ஏற்ற பரிகாரமாக அமையும். வெளிநாட்டு முதலீடுகளை ஆராய்ந்து செய்யவும்.

1012
மகரம் (Capricorn): அமைதியும் சந்தோஷத்தையும் காணலாம்

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டு உங்களின் நிதி நிலை இன்று சீராக இருக்கும். வீட்டிலும் பணியிடத்திலும் அமைதியும் சந்தோஷத்தையும் காணலாம். சந்திரமௌளீஸ்வரரை வழிபடலாம். சனிக்கிழமை எள் தயிர் சாதம் நிவேதனம் செய்வது நல்ல பரிகாரம். நிலத்தில் முதலீடு நன்மை தரும்.

1112
கும்பம் (Aquarius): தொழில் வளர்ச்சி மேலோங்கும்

எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் உங்களின் தொழில் வளர்ச்சி இன்று மேலோங்கும். செலவுகள் கட்டுப்படுத்தப்படும். சிவனை வழிபட பரிகாரம் சிறப்பாக அமையும். ராகு-கேதுவுக்கு ஹோமம் செய்வது நல்ல பரிகாரம். பங்குச் சந்தையில் சுரங்கம் சார்ந்த பங்குகள் சாதகமாக அமையும்.

1212
மீனம் (Pisces): புதிய முயற்சிகளில் வெற்றி காணப்படும்

கொடுத்து சிவந்த கரங்களை கொண்ட மீன ராசிகாரர்களே இன்று உங்களின் சிந்தனைகள் தெளிவாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காணப்படும். திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடலாம். குருவுக்கு மஞ்சள் தீபம் ஏற்ற பரிகாரம் சிறந்தது. தங்க நகைகளில் முதலீடு செய்தால் நன்மை அதிகம்.

Read more Photos on
click me!

Recommended Stories