பெண்களே!! இந்த தேதியில் பிறந்த ஆண்களை கல்யாணம் பண்ணுங்க!! ராணி மாதிரி பார்த்துப்பாங்க

Published : Jun 21, 2025, 11:11 AM IST

எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்த ஆண்கள் தங்கள் என் மனைவியை மிகவும் நேசிப்பார்கள் என்றும், அவர்களை ராணியைப் போல நடத்துவார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
15
மனைவியை அதிகமாக நேசிக்கும் கணவன்

ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணத்தை குறித்து பல கனவுகள் மற்றும் ஆசைகள் இருக்கும். தனக்கு வரும் வாழ்க்கை துணை தன் மிகவும் நேசிக்கும் நபராகவும், தன்னை நன்றாக நடத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தன்னிடம் தான் அதிக அன்பை காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் இந்த கொடுப்பினை எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால் எண் கணிதத்தின்படி, இந்த எண்ணில் பிறந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டால் உங்களது ஆசை நிச்சயமாக நிறைவேறும் தெரியுமா?

25
எண் கணிதம் சொல்வது என்ன?

இந்து மதத்தில் எண் கணிதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எண் கணிதத்தின் படி, நாம் பிறந்த தேதியை வைத்து நம்முடைய ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணித்து விடலாம். அந்த வகையில், எண் கணிதத்தின் படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது மனைவியை மிகவும் அதிகமாக நேசிப்பார்கள். சொல்ல போனால் அவர்களை ராணியை போல நடத்துவார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இப்போது பார்க்கலாம்.

35
எண் 2

எண் கணிதத்தின் படி, எண் 2 பிறந்த ஒவ்வொரு ஆண்களும் ரொம்பவே நல்லவர்கள். அவர்கள் எந்த வகையிலும் தங்களது மனைவியை ஏமாற்ற மாட்டார்கள். ஆகவே 12 மாதத்திலும் எண், 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகள் அனைத்தும் எண் 2இன் கீழ் வரும். இந்த குறிப்பிட்ட தேதியில் பிறந்த ஆண்களை பெண்கள் தயக்கமில்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த எண்களின் அதிபதி சந்திரன். ஜோதிடத்தின் படி சந்திரன் மனதின் காரணியாகும்.

45
எண் 2 இன் ஆளுமை:

எண் கணிதத்தின் படி, மேலே சொன்ன 4 எண்களில் பிறந்த ஆண்மக்கள் நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, மனதிலும் வஞ்சகம் இல்லாதவர்கள். இவர்கள் தங்களது குடும்பத்தை ரொம்பவே மதிக்கிறார்கள். குறிப்பாக தங்கள் மனைவியை மிகவும் அதிகமாக நேசிக்கிறார்கள். இந்த எண்களில் பிறந்த ஆண்கள் மனைவியின் மகிழ்ச்சிக்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இவர்கள் தங்கள் மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வார்கள். ஆகவே இந்த ஆண் மக்களுக்கு நல்ல கணவர் என்று விருதை கூட கொடுக்கலாம்.

இந்த நான்கு தேதியில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். இவர்கள் தங்கள் மனைவி மட்டுமின்றி குழந்தைகளையும் மிகவும் நேசிக்கிறார்கள். இவர்களிடம் இருக்கும் இந்த குணாதிசயத்தின் காரணமாக அவர்களின் குடும்பம் எப்போதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

55
எண் 2 இல் பிறந்த ஆண்கள்

எண் 2இன் கீழ் வரும் ஆண்கள் சிறுவயதில் இருந்து படிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் எப்போதுமே ஆக்கபூர்வமான விஷயங்களை தான் செய்ய விரும்புவார்கள். இவர்கள் சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சிவபெருமானின் அருளால் இவர்கள் எவ்வளவு பெரிய சிரமத்தையும் சுலபமாக எதிர் கொள்வார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தை மட்டுமல்ல நண்பர்களையும் நேசிப்பார்கள். சொல்ல போனால் நட்பில் கூட இவர்களை மிஞ்ச யாரும் இல்லை. மேலும் இவர்கள் எல்லா கெட்ட பழக்கங்களிலிருந்தும் விலகி இருப்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories