Astrology: இந்த 5 ராசியில் பிறந்த குழந்தைகள் அதிபுத்திசாலியா, படிப்பில் நம்பர் 1 ஆ இருப்பாங்க.! உங்க குழந்தை ராசி இருக்கா?

Published : Sep 26, 2025, 01:00 PM IST

Children of these zodiac signs are incredibly intelligent: ஜோதிட சாஸ்திரங்களின் படி சில ராசிகளில் பிறந்த குழந்தைகள் இயல்பாகவே அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
அறிவாற்றலை நிர்ணயக்கும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு குழந்தையின் புத்திசாலித்தனம் அல்லது அறிவாற்றல் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ராசி மட்டுமல்லாமல் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பு, தசா புத்தி, லக்னம், நவாம்சம் மற்றும் பிற யோகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அறிவாற்றல், ஆராய்ச்சி திறன், புரிதல் மற்றும் புத்திசாலித்தனம் மிக்கவர்களாக திகழ்கின்றனர். இந்த ராசிகளில் பிறந்த குழந்தைகள் மிகுந்த அறிவுத்திறன் மற்றும் ஆற்றலுடன் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

27
1.மிதுனம்

மிதுன ராசி புதன் பகவானால் ஆளப்படும் ராசியாகும். புதன் பகவான் அறிவு, தகவல் தொடர்பு, பகுப்பாய்வு மற்றும் புரிதல் ஆகியவற்றிற்கு காரகராக விளங்கும் கிரகமாவார். மிதுன ராசியில் பிறந்த குழந்தைகள் புத்திசாலிகளாகவும், ஆர்வம் உள்ள மிக்கவர்களாகவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பல துறைகளில் திறமை வாய்ந்தவர்களாகவும், தகவல் தொடர்பு, எழுத்து, பேச்சு ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். இவர்களது மனம் வேகமாக செயல்படும் இயல்பு கொண்டது. இதன் காரணமாக சிக்கலான பிரச்சனைகளை விரைவாக தீர்க்கும் திறன் உள்ளது. பிரபலமான எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அறிவியல் அறிஞர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக இருக்கலாம்.

37
2. கன்னி

கன்னி ராசியையும் புதன் பகவான் ஆள்கிறார். ஆனால் கன்னி ராசி மிதுனத்தை விடவும் மிகவும் பகுப்பாய்வு மற்றும் ஒழுங்கமைப்பு மிக்க ராசியாக கருதப்படுகிறது. கன்னி ராசியில் பிறந்த குழந்தைகள் மிகவும் கவனமாகவும், விவரங்களை உன்னிப்பாக கவனிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுவார்கள். சிக்கலான தகவல்களை ஒழுங்குப்படுத்துவதில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு இயல்பாகவே நுண்ணறிவு மற்றும் விமர்சன சிந்தனை (Critical Thinking) உள்ளது. இது அறிவியல், கணிதம் அல்லது தொழில்நுட்பத் துறைகளில் வெற்றியைத் தருகிறது. கன்னியில் புதன் உச்சம் பெறுவதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அறிவாற்றல் மிகவும் தீவிரமாக இருக்கும்.

47
3. கும்பம்

கும்ப ராசி சனி மற்றும் யுரேனஸால் ஆளப்படுகிறது. இது புதுமையான சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் முற்போக்கான அறிவாற்றலுடன் தொடர்புடையது. கும்ப ராசியில் பிறந்த குழந்தைகள் புதுமையானவர்களாகவும், அசாதாரணமான யோசனைகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கு சமூக மாற்றங்கள் மற்றும் மனித நேயம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்க்கும் திறமை உள்ளது. பல பிரபலமான விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள் கும்ப ராசியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

57
4. விருச்சிகம்

விருச்சிக ராசியை செவ்வாய் மற்றும் புளூட்டோ ஆள்கிறது. இது ஆழமான ஆராய்ச்சி, மறைந்திருக்கும் உண்மைகளை கண்டறியும் திறன் மற்றும் தீவிரமான புரிதலுடன் தொடர்புடையது. விருச்சிக ராசியில் பிறந்த குழந்தைகள் ஆழ்ந்த சிந்தனையாளர்களாகவும், மறைந்திருக்கும் தகவல்களை கண்டறியும் திறமை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். இவர்கள் உளவியல், மருத்துவம், துப்பறியும் பணிகள் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக ஆராய்ந்து அதை எளிதில் புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர்களாக விளங்குகின்றனர். உளவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், துப்பறிவாளர்கள் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

67
5. தனுசு

தனுசு ராசி குருபகவானால் ஆளப்படும் ராசியாகும். குரு பகவான் ஞானம், உயர்கல்வி மற்றும் ஆழமான சிந்தனைகளுக்கு காரராக விளங்குகிறார். தனுசு ராசியில் பிறந்த குழந்தைகள் பரந்த அறிவு, தத்துவ சிந்தனை மற்றும் உயர்ந்த இலக்குகளை அடையும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கல்வி, தத்துவம், சட்டம் அல்லது ஆன்மீகத் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு புதிய கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் அறிவை ஆராயும் ஆர்வம் இயல்பாகவே உள்ளது. ஆசிரியர்கள், தத்துவவாதிகள், பயண ஆய்வாளர்கள் தனுசு ராசியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். குரு மற்றும் சூரியனின் ஆற்றல் இருப்பதால் இவர்களின் அறிவாற்றல் அதிகமாக உள்ளது.

77
முழு ஜாதகத்தையும் ஆராய வேண்டும்

ஒரு குழந்தையின் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்க ராசி மட்டும் போதாது. ஜாதகத்தில் கல்வி மற்றும் அறிவாற்றலின் வீடான ஐந்தாம் இடமும், தகவல் தொடர்பின் வீடான மூன்றாம் இடமும், உயர்கல்வியின் வீடான ஒன்பதாவது இடமும் வலுவாக இருக்க வேண்டும். எந்த ராசியாக இருந்தாலும் புதன் மற்றும் குருவின் நிலை வலுவாக இருந்தால் அந்த குழந்தை புத்திசாலியாக இருக்கும். குழந்தையின் வாழ்க்கையில் எந்த கிரகத்தின் திசை நடக்கிறது என்பதும் அறிவாற்றலை பாதிக்கும். 

மேற்குறிப்பிடப்பட்ட ராசிகளில் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலித்தனம் மிக்கவர்கள் என்றாலும், குழந்தையின் அறிவாற்றல் என்பது முழு ஜாதகத்தையும் பொறுத்தது. எனவே துல்லியமான மதிப்பீட்டிற்கு குழந்தையின் பிறப்பு, நேரம், தேதி, இடத்தை வைத்து ஜாதகத்தை ஆராய வேண்டியது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories