Astrology: ராகுவின் நட்சத்திரத்தில் குடியேறிய செவ்வாய்.! செவ்வாய் பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப் போகும் 3 ராசிகள்.!

Published : Sep 24, 2025, 12:38 PM IST

Chevvai Peyarchi: செவ்வாய் பகவான் தற்போது சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்திருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
செவ்வாய் பெயர்ச்சி 2025

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். கிரகங்களின் தளபதியான இவர் வலிமை, துணிச்சல், வீரம், தைரியம் ஆகியவற்றின் காரகராகவும், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாகவும் செவ்வாய் பகவான் விளங்குகிறார். 45 நாட்கள் இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். அதே போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றிக் கொள்கிறார். தற்போது துலாம் ராசியில் பயணித்து வரும் அவர் செப்டம்பர் 23 சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்திருக்கிறார்.

25
சுவாதி நட்சத்திரக்கு செல்லும் செவ்வாய்

சுவாதி நட்சத்திரம் ராகு பகவானால் ஆளப்படும் நட்சத்திரமாகும். ராகுவின் நட்சத்திரத்திற்குள் செவ்வாய் நுழைந்திருப்பது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. செவ்வாய் பகவான் அக்டோபர் 15 ஆம் தேதி வரை சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்க இருக்கிறார். செவ்வாயின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
ரிஷபம்

ரிஷப ராசியின் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் செவ்வாயின் சுவாதி நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையை வழங்க உள்ளது. இதுவரை சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்க இருக்கிறது. தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். அலுவலகத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறைந்து மன நிம்மதி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து வழங்குவார்கள்.

45
கடகம்

கடக ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணித்து வரும் நிலையில், அவரின் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கும் நன்மைகளை வாரி வழங்க உள்ளது. கடக ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். சிறியதாக தொழில் செய்து வரும் வியாபாரிகள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம். குறைவான ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். கல்வி, கலை மற்றும் படைப்புத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த சாதகமான நேரமாகும். நிதி சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கலாம். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியும், நல்லிணக்கமும் ஏற்படும்.

55
கும்பம்

கும்ப ராசியின் இந்த பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தலைமைப் பண்புகள் பளிச்சிடும். புதிய திட்டங்கள் அல்லது புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு உகந்த காலம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பாரட்டப்படும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு இந்த காலம் உதவியாக இருக்கும். உறவுகளில் ஏற்படும் சிறு சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் தொலைநோக்கு திட்டங்கள் வெற்று பெறுவதற்கு செவ்வாயின் ஆற்றல் உதவும். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த காலம் மன அமைதியைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories