Astrology: இரு மடங்கு சக்தியுடன், அசுர வேகத்தில் நகரப் போகும் சனி பகவான்.! 3 ராசிகள் ராஜ வாழ்க்கை வாழப் போறீங்க.!

Published : Sep 24, 2025, 10:42 AM IST

50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மடங்கு சக்தியுடன், அசுர வேகத்தில் சனி பகவான் நகர இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
இருமடங்கு சக்தி பெற்ற சனி பகவான்

ஜோதிடத்தின்படி சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக அறியப்படுகிறார். இவர் மெதுவாக நகரும் ஒரு கிரகமாகும். ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை தங்கி இருக்கிறார். இதன் காரணமாக அவர் மீண்டும் அந்த ராசிக்கு திரும்புவதற்கு பல ஆண்டுகள் ஆகிறது. அவரின் பெயர்ச்சியானது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். வக்ர நிலை என்பது பின்னோக்கி நகர்வது அல்லது தலைகீழாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றம் ஆகும்.

25
சூரிய பகவானின் பார்வை

செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை சூரிய பகவானின் பார்வை சனி பகவான் மீது நேரடியாக விழுகிறது. இதன் காரணமாக சனிபகவான் இரட்டிப்பு சக்தி வாய்ந்தவராக மாற இருக்கிறார். மேலும் அவர் அசுர வேகத்தில் தனது நகர்வை தொடர இருக்கிறார். இதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. இவர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவதோடு, வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெற உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
ரிஷபம்

சனி பகவான் இரு மடங்கு சக்தி வாய்ந்த வேகத்தில் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் உங்கள் ராசியின் அதிர்ஷ்டம் மற்றும் கர்மாவின் அதிபதியான சனி பகவான், உங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நகர இருக்கிறார். இதன் காரணமாக உங்களின் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும். பொன், பொருள், சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். புதிய வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்தி பல வெற்றிகளை குவிப்பீர்கள்.

45
மிதுனம்

சனி பகவான் இரட்டை சக்தியை பெறுவது மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்களும் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் போட்டியாளர்கள் உங்களைக் கண்டு அஞ்சி ஓடுவார்கள். இதன் காரணமாக லாபம் இரட்டிப்பாகும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிதாக நிலம், கட்டிடம், வாகனம் வாங்க யோகமும் உண்டு.

55
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பல நன்மைகளை வழங்க இருக்கிறார். இத்தனை நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நீங்கி, சொத்துக்கள் உங்கள் வாரிசுகளை வந்தடையலாம் அல்லது சொத்துக்களை சமூகமாக விற்று பணத்தைப் பெறுவீர்கள். நிதி நிலைமை கணிசமாக உயரும். ஆரோக்கியம் மேம்படும். உங்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். இதன் காரணமாக குழப்பமில்லாமல் தெளிவான முடிவுகளை எடுத்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories