2026 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் பல கிரகங்களின் நிலைகளில் முக்கிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஜனவரி 16, 2026 அன்று செவ்வாய் பகவான் தனது உச்ச வீடான மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். செவ்வாய் தனது சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அமரும் பொழுது பஞ்ச புருஷ மகாயோகங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் பிப்ரவரி 23, 2026 வரை நீடிக்க இருக்கிறது.
செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவதால் அவரின் வீரியம் பல மடங்கு அதிகரித்து நற்பலன்களை வாரி வழங்க இருக்கிறார். இந்த யோகம் ஒருவருக்கு அபாரமான துணிச்சல், தலைமைப் பண்பு, நிலம் மற்றும் சொத்து சேர்க்கை, அதிகாரப் பதவிகள் ஆகியவற்றை வழங்கும். ருச்சக யோகத்தின் முழு பலன்களையும் அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.