Published : Oct 22, 2024, 10:58 AM ISTUpdated : Oct 22, 2024, 12:02 PM IST
Lakshmi Narayana Yogam 2024 Palan in Tamil: அக்டோபர் 29 முதல் விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் ரிஷபம், கன்னி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ASTROLOGY, Budhan Sukran Serkai 2024 Palan in Tamil
Lakshmi Narayana Yogam 2024 Palan in Tamil: அக்டோபர் 13 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியை விட்டு விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இப்போது அக்டோபர் 29 முதல் புதனும் விருச்சிக ராசிக்குள் நுழைவார். இதனால் விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் புதன் இணைவு ஏற்படும். ஜோதிடத்தில், சுக்கிரன் லட்சுமி தேவியின் பிரதிநிதியாகவும், புதன் விஷ்ணுவின் நாராயண அவதாரத்தின் பிரதிநிதியாகவும் கருதப்படுகிறார்கள்.
26
Horoscope, Sukran Budhan Serkai, Lakshmi Narayana Yogam 2024 Palan in Tamil
இந்த இரு கிரகங்களின் சேர்க்கை லட்சுமி நாராயண யோகம் என்று அழைக்கப்படுகிறது, இது செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். புதன்-சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிகள் தீபாவளிக்கு முன்பு அதிர்ஷ்ட மழையில் நனையலாம். அந்த 3 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…
ரிஷப ராசிக்காரர்களுக்கு விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தின் தாக்கம் மிகவும் நன்மை பயக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பண வரவு இருப்பதால் உங்கள் நிதி நிலை வலுவடையும்.
46
Zodiac Sign, Lakshmi Narayana Yogam 2024, Budhan Sukran Serkai 2024 Palan in Tamil
நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் உதவியால் உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். சமூக சேவையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கும். வணிகர்களுக்கு எங்காவது சிக்கிய பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
56
Horoscope, Lakshmi Narayana Yogam 2024
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிகவும் பலனளிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிக சந்திப்புகளில் வெற்றி கிடைக்கும், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு போனஸ் உடன் பரிசுகள் கிடைக்கலாம், சம்பளமும் உயர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் பணம் தொடர்பான பதற்றத்திலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் சரியான முயற்சிகளால் நல்ல பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறவுகள் வலுவடையும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். வேலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதற்கு தீர்வு கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும், உங்களுக்கு மரியாதை கிடைக்கலாம். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகளும் உள்ளன. பழைய கடன்களை அடைப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். புதிய முதலீடுகளுக்கு இது நல்ல நேரம்.