Published : Oct 22, 2024, 07:29 AM ISTUpdated : Oct 22, 2024, 08:48 AM IST
Saturn Retrograde 2024 Palan in Tamil: தீபாவளி அன்று சனி மற்றும் குரு வக்ரகதியில் இருப்பது 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால், இந்த 3 ராசிகர்களுக்கு திடீர் அதிர்ஷடத்தை உண்டாக்கி கொடுக்கும். அவர்கள் யார் என்ன பலன் என்று பார்க்கலாம்.
Saturn Retrograde 2024 Palan in Tamil: சனி இரண்டரை ஆண்டுகளிலும், குரு ஒரு வருடத்திலும் ராசி மாறுகிறார்கள். தற்போது சனி மற்றும் குரு இரண்டு கிரகங்களும் வக்ர கதியில் செல்கின்றன. சனி தனது மூலத்திரிகோண ராசியான கும்ப ராசியில் வக்ரகதியிலும், குரு ரிஷப ராசியில் வக்ரகதியிலும் செல்கிறார். தீபாவளி அன்று சனி மற்றும் குரு இரண்டு கிரகங்களும் வக்ரகதியில் இருக்கும்.
25
Saturn Retrograde 2024 Palan in Tamil
நவகிரகங்களில் சனி மற்றும் குரு மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றன. தீபாவளி அன்று இந்த இரண்டு கிரகங்களின் வக்ரகதி அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் 3 ராசிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். அந்த 3 ராசிக்காரர்கள் யார் என்ன பலன் உண்டாகும் என்று பார்க்கலாம்.
35
Jupiter Retrograde 2024 Palan in Tamil, Taurus, Astrology
குரு மற்றும் சனியின் வக்ரகதி ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய பொருளாதார நன்மைகளைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். எதிர்பார்த்ததை விட உயர்ந்த பதவி, சம்பளம் கிடைப்பதால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போகும். பணியிடத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பல வழிகளில் பணம் வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்.
குரு மற்றும் சனியின் வக்ரகதி தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மை பயக்கும். எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். பயணங்கள் செய்வீர்கள், அதனால் நன்மைகளும் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
55
Jupiter Saturn Retrograde 2024 Palan in Tamil, Zodiac Sign, Aquarius
சனி மற்றும் குருவின் வக்ரகதி கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும். செலவுகள் மற்றும் பிரச்சினைகள் குறையும். இதனால் பணப்பை நிறையும், மனம் லேசாகும். பணம்-சொத்துக்களில் வளர்ச்சி ஏற்படலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தீபாவளி பண்டிகையை முழுமையாக அனுபவிப்பீர்கள்.