Birth Stars: சில நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், மனைவி மீது அதிக அன்பைப் பொழிபவர்களாகவும் இருப்பார்களாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி சில நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்குவார்களாம். குடும்பத்தில் உள்ள மற்றவர்களை விடவும் தங்கள் மனைவிகளை அதிகமாக நேசிப்பார்களாம். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தங்கள் மனைவிக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்களாம். அந்த நட்சத்திரங்கள் குறித்து இங்கு காணலாம்.
26
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் இயல்பாகவே அன்பானவர்கள். அவர்கள் தங்கள் மனைவிகளை மிகவும் நேசிக்கிறார்கள். மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். திருமண வாழ்க்கையை அவர்கள் புனிதமான பந்தமாக கருதுகிறார்கள். மனைவி சொல்வதை செய்வதற்கு ஒரு போதும் தயங்க மாட்டார்கள்.
36
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளும் தங்கள் மனைவிக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். அவர்கள் தங்கள் மனைவியை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார்கள். அவர்கள் விரும்புவதை உடனே வாங்கி கொடுப்பார்கள். தங்கள் மனைவியின் பேச்சைக் கேட்டு, அவர்களின் விருப்பப்படி செயல்படுவார்கள். அவர்கள் சொல்வதை தவறாமல் பின்பற்றுவார்கள்.
பூச நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் மிகவும் பொறுப்பானவர்கள். அவர்கள் குடும்பத்தை அதிகம் மதிக்கிறார்கள். குடும்ப உறவுகளில் மனைவியின் முக்கியத்துவத்தை அறிந்து நடந்து கொள்கிறார்கள். மற்ற அனைவரையும் காட்டிலும் மனைவியை அதிகமாக நேசிக்கிறார்கள். மனைவி என்ன சொன்னாலும் அதை கவனமாக கேட்கிறார்கள். மனைவிக்கு எந்த குறைபாடும் ஏற்பட அவர்கள் அனுமதிப்பதில்லை. மனைவி சொல்லும் அனைத்தையும் பின்பற்றி நடப்பார்கள்.
56
ஹஸ்தம்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் மிகவும் அமைதியானவர்கள். அவர்கள் மோதலை விரும்புவதில்லை. குடும்பத்தில் அமைதியான சூழலை விரும்புகிறார்கள். தங்கள் மனைவியிடம் பேசி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள். மனைவியின் ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மனைவியின் கனவுகளை நிறைவேற்ற அதிகம் முயற்சி செய்வார்கள்.
66
சதயம்
சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களும் அமைதியான சுபாவத்தை கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் மனைவி மீது அளவில்லாத அன்பை பொழிகின்றனர். குடும்ப அமைதிக்காக மனைவியின் வார்த்தைகளை மிகவும் மதிக்கின்றனர். மனைவியின் மனம் காயப்படுவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உணர்வுபூர்வமான அன்பை கொடுத்து மனைவியை எப்போதும் நேசிக்கும் சிறந்த வாழ்க்கை துணையாக அவர்கள் விளங்குகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)