இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் பன்முகத் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். பல்வேறு துறைகளில் ஆர்வம், திறமையைக் காட்டலாம். கலை, இசை, எழுத்தில் சிறந்து விளங்கலாம். ராணுவம், காவல் துறை, பிற ராணுவப் பிரிவுகளில் பணிபுரிந்தால் நல்லது. இந்தக் குழந்தைகளுக்கு உடல் வலிமை, தைரியம், தலைமைத்துவ குணம் இருப்பதால் இந்தத் துறைகளில் வெற்றி கிடைக்கும்.