உங்கள் குளியலறையில் இந்த பொருளெல்லாம் இருக்கா? டக்குனு அப்புறப்படுத்துங்க - அது துரதிஷ்டத்தை ஈர்க்குமாம்!

First Published | Oct 14, 2023, 4:13 PM IST

நமது வீட்டு குளியல் அறைக்கு என்று சில வாஸ்துக்கள் உள்ளது, இதை பொதுவாக குளியலறை வாஸ்து என்று அழைப்பாளர்கள். அந்த வகையில் நமது வீட்டு குளியலறைக்குள் இருக்கக் கூடாதா ஐந்து முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Broken Glass

உடைந்த கண்ணாடி 

நிச்சயமாக நமது குளியலறைக்குள் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளை வைப்பது பெரும் துரதிஷ்டத்தை அழைத்து வரும். குளியலறை மட்டுமல்ல, வீட்டில் எந்த இடத்திலும் முகம் தெளிவாக தெரியாத அல்லது உடைந்த கண்ணாடிகளை வைப்பது எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டுவரும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். 

வீட்டிற்குள் சிட்டுக்க்குருவி, புறா வந்தால் நல்ல சகுனமா? எந்த உயிரினங்கள் வந்தால் கெட்ட சகுனம்?

Broken Tap

பழுதான தண்ணீர் குழாய் 

பழுதடைந்த மற்றும் உடைந்த தண்ணீர் குழாய்களை குளியலறைக்குள் இருப்பதை தவிர்க்க வேண்டும். சில இடங்களில் எவ்வளவு தான் குழாயை மூடினாலும் தண்ணீர் சொட்டு சொட்டாக அல்லது தொடர்ந்து ஒழுகிக் கொண்டே இருக்கும். இதுவும் ஒரு எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டுவரும் திறன் கொண்டது. ஆகையால் பழுதடைந்த குழாய்களை உங்கள் குளியறைக்குள் மட்டுமல்லாமல் வீட்டில் எந்த பகுதியிலும் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Wet Clothes

ஈரமான துணிகள் 

ஈரமான துணிகள் அல்லது அழுக்கு படிந்த துணிகளை உங்கள் வீட்டின் குளியல் அறையில் வைக்க வேண்டாம். காரணம் இது வாஸ்து தோஷம் ஆகும் மற்றும் சூரிய தோஷத்தையும் ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Empty bucket

காலி வாளி மற்றும் வாடிப்போன செடிகள்

பொதுவாக உங்கள் குளியலறையில் இருக்கும் வாளிகளை எப்போதும் சிறிதளவு நீரோடு வைத்திருப்பது நல்லது. காரணம் காலி வாளி என்பது உங்கள் பர்ஸையும் காலி செய்யும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது/ அதேபோல உடைந்த வாளியையும் வைத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள். 

மேலும் சிலர் குளியல் அறைக்குள் செடிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி வளர்ப்பது நல்லது தான் என்றாலும், வாடிப்போன அல்லது உலர்ந்து போன செடிகளை வைக்க கூடாது, அது பெரும் துரதிஷ்டத்தை வீட்டுக்குள் கொண்டு வரும் என்கிறார்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.

Shani Amavasai 2023 : இன்று சனி அமாவாசை...இந்த 5 ராசிக்கு சனியின் அருள் கிடைப்பது நிச்சயம்..!

Latest Videos

click me!