இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?

Published : Feb 24, 2026, 04:59 PM IST

புல்கேரிய ஜோதிடர் பாபா வாங்கா கூறியதாக பரவி வரும் கணிப்பின்படி, சில ராசிக்காரர்களுக்கு விரைவில் செல்வ யோகம் உருவாகலாம் என சொல்லப்படுகிறது. உங்கள் ராசி இதில் உள்ளதா? முழு விவரங்களை தெரிந்து கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுங்கள்.

PREV
15
பாபா வாங்கா கணிப்பு

பிரபல ஜோதிடர் பாபா வங்கா தனது எதிர்கால கணிப்புகளால் உலகம் முழுவதும் கவனம் பெற்றவர். பார்வை இழந்திருந்தாலும், பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கூறியதாக நம்பப்படுகிறது. அதனால் அவருடைய ஜோதிடக் கணிப்புகள் இன்று வரை பேசுபொருளாக உள்ளன. சமீபத்தில் சில ராசிக்காரர்கள் விரைவில் பொருளாதார உயர்வு காணலாம் என்ற அவரது கணிப்பு மீண்டும் பேசப்படுகிறது.

25
செல்வ யோகம்

அவரின் கணிப்புப்படி, கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் காலம் நெருங்குகிறது. குறிப்பாக மார்ச் மாதத்திற்கு பிறகு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக காத்திருந்த முயற்சிகள் வெற்றியாக மாறும் சூழல் உருவாகும். குடும்பத்திலும் வேலைத்தளத்திலும் சாதகமான மாற்றங்கள் உண்டாகும்.

35
பணவரவு அதிகரிப்பு

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரட்டை வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகலாம் என கூறப்படுகிறது. முதலீடுகள் நல்ல பலன் தரக்கூடும். சொத்து வாங்கும் கனவு இருந்தால் அது நிறைவேறும் சூழ்நிலை உருவாகலாம். உடல்நலம் மற்றும் மனநிலையில் முன்னேற்றம் காணப்படும் காலமாக இது அமையலாம்.

45
அதிர்ஷ்ட ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. அரசு வேலை அல்லது நிலையான தொழில் வாய்ப்பு கிடைக்கலாம். பணவரவு மேம்பட்டு சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கூட கிடைக்கலாம் என்ற கணிப்புகள் கூறுகின்றன.

55
கோடீஸ்வர ராசிகள்

கும்ப ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நேரத்தில் நிறைவேறும் சூழ்நிலை உருவாகலாம். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரக்கூடும். வருமானம் அதிகரித்து சமூக மரியாதை உயரும் காலமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜோதிட கணிப்புகள் ஒரு வழிகாட்டுதலாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். முயற்சி மற்றும் திட்டமிடுதல் தான் உண்மையான வெற்றிக்கான அடித்தளம் ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories