Astrology: இந்த நாளில் தொழில் தொடங்குங்கள் ஜாலியா! நீங்களும் "அம்பானி" ஆகலாம் ஈசியா!

Published : Jun 27, 2025, 05:33 PM IST

தொழில் வளர்ச்சிக்கு ஜாதகத்தில் பத்தாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் தொடங்கும் நேரம், நட்சத்திரம், யோகம், முகூர்த்த நாள், காரக கிரகம், ராசி, வாரநாள் போன்ற ஜோதிட வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் தொழில் வெற்றி பெறலாம்.

PREV
18
தொட்டதெல்லாம் பொன்னாகும்

சிலரின் தொழில் வளர்ச்சி நம்மை வியக்க வைத்துவிடும். அவர்கள் தொடுக்கும் எதுவும் வெற்றி பெறும் நிலையில் இருக்கும். இப்படியான தொழில் வெற்றிக்கு ஜாதகத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலில் முன்னேற்றம் பெற சில எளிய ஜோதிட வழிகாட்டல்களைப் பயன்படுத்தலாம்.

28
குரு பார்த்தால் கோடி நன்மை

உங்கள் ராசிக்கு 2, 5, 7, 9, 11-ம் இடங்களில் குரு செல்கின்ற காலத்தில் தொழில் தொடங்குவது சிறந்தது. அந்தக் காலங்களில் குருபலம் அதிகரிக்கும் என்பதால் துவக்கம் வெற்றிகரமாக அமையும்.

38
வழிகாட்டும் நட்சத்திரம்

தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் உங்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8 அல்லது 9-ஆவது நட்சத்திரமாக அமைந்திருக்க வேண்டும். இது தொழில் வளர்ச்சிக்கு உகந்தது.

48
அள்ளிக்கொடுக்கும் அமிர்த யோகம்

அமிர்த யோகம் உள்ள நாளில் தொழில் துவங்குவது மிகச் சிறப்பு தரும். அமிர்த யோகம் கிடைக்காவிட்டால், சித்த யோகம் கொண்ட நாளை தேர்வு செய்யலாம். மரண யோகம் மற்றும் பிரபாலாரிஷ்ட யோகம் உள்ள நாட்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

58
தொழில் தொடங்க இது முக்கியம்

தொழில் தொடங்கும் நாள் சுப முகூர்த்த நாளாக இருக்க வேண்டும். தொழில் ஸ்தானமும், அதின் அதிபதியும் பலமாக இருக்கும் லக்னம் அமையும் நேரத்தில் தொழிலை துவங்குவது மிகச் சிறப்பு. அப்போது பஞ்சக சுத்தம் (திதி, வாரம், நட்சத்திரம், லக்னம், துருவம்) சரியாக இருக்க வேண்டும்.

68
காரக கிரகம் பலம் தேவை

தொழில் துறைக்கு ஏற்ப அந்தத் தொழிலுக்கு காரக கிரகம் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, தங்கம், வெள்ளி, ரத்தினம் போன்ற வியாபாரம் செய்வோருக்கு துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி ஆகிய திதிகள் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. அசுவினி, ரோகிணி, புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் போன்ற நட்சத்திர நாட்கள் மிகச் சிறப்பானவை.

78
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

தொழில் தொடங்கும் நாளின் ராசி, ஜாதகரின் பிறந்த ராசிக்கு 6, 8, 12-வது ராசியாக இருக்கக் கூடாது. அந்த நாளில் லக்னத்துக்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், பாபிகளுடன் சேராத புதன் இருந்தால் அது மேலும் பலனளிக்கும்.

88
வாரநாள்களில் தொழில் தொடங்குவது நல்லது

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய வாரநாள்களில் தொழில் தொடங்குவது சுபமானது. இதில் புதன் கிழமை மிகச்சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் புதன் பிசினஸுக்குக் காரக கிரகம் ஆகும்.இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி தொழில் துவங்கினால், உங்களின் முயற்சிகள் நிச்சயமாக சிறந்த வெற்றியை பெறும்.

Read more Photos on
click me!

Recommended Stories