
கிராமத்திலோ, நகரத்திலோ,சின்னதோ பெரியதோ ஏதோ ஒரு இடத்தில் சொந்தமாக வீடு கட்டிவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக எளிதில் சொந்தவீடு அமையும். கையில் காசு இல்லை, இடம் இல்லை என்ற நிலையில் இருந்தாலும் கேட்டதையெல்லாம் கொடுக்கும் ஒருவன் இறைவனாக இருக்கும் போது நடுத்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் ஏன் கவலை. ஜாதகத்தில் கட்டம் சரியில்லை என்று சொன்னால் கூட சில ஆலயங்களுக்கு சென்றால் நல்லது எல்லாம் கிடைக்கும். அதவும் சொந்தமாக வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள் சில ஆலயங்களுக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்தால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விரைவில் கோரிக்கை வைத்தவர்களுக்கு வீடுகள் சொந்தமாகும்.
ஒருவருக்கு செவ்வாய் கிரகத்தின் அருள் இருந்தால் அவருக்கு சொந்தமாக வீடு அமையும் என்கின்றனர் ஜோதிடர்கள். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று அமர்ந்திருந்தால், அவருக்கு நிச்சயம் சொந்த வீடு அமையும். செவ்வாய் பலவீனமாக இருந் தால், உரிய பரிகாரங்களை செய்து அதனை பலப்படுத்தி வேண்டியதை பெற்று சாதனை படைக்கலாம்.
அங்காரகன் எனப்படும் செவ்வாய் கிரகம் கனபதியின் பக்தர். செவ்வாய் பகவானின் பக்தியை மெச்சி, அவருக்கு நவகிரக பதவி பெறும் வல்லமையை அருளினாராம் கனபதி.அது மட்டுமன்றி, செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி நாளில் தன்னை வழிபடுவோரின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி அருள்புரிவதாகவும் விநாயகர் தெரிவித்தாராம். இதனால் சொந்த வீடு அமைய செவ்வாய் பகவானின் துணை நாடும் அன்பர்கள், செவ்வாய் கிழமை வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகர் தலங்களைத் தரிசித்து வருவது சிறப்பான பலன்களை கொடுக்கு்ம.
பிள்ளையார்பட்டி கற்பகக் கணபதியை வீடு வேண்டுவோர் வழிபட்டு உயர்வடையலாம். பிள்ளையார்பட்டியில், பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் அருளும் விநாயகர், இங்கே இரண்டு கரங்களுடன், அங்குச-பாசம் இல்லாமல் காட்சி தருகிறார். துதிக்கையை வலம் சுழித்து இருவ்பது விசேஷம்,. அங்காரக சதுர்த்தி அன்று குடும்பத்தோடு சென்று கனபதியை வழிபட்டு வந்தால் சொந்தவீடு யோகம் கட்டாயம் கிடைக்கும்.
திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் உள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பூமிநாதர் ஆலயம், வீடு- மனை வாங்குகிற யோகத்தை அளிக்கும் ஸ்தலமாகும். இத்தளத்தில் உள்ள சிவனின் நெற்றியில் இருந்து விழுந்த வியர்வைத்துளியில் தோன்றிய சிவகணம், இறைவனின் உத்தரவின் பேரில், பூமியில் உள்ள மக்கள் வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவ தற்கு உறுதுணையாகவும் பக்கபலமாக நீ இருக்கும் என்பது ஐதீகம். இதனால் இன்றளவும் வீடு-மனை வாங்குகிற யோகத்தைத் தந்தருள்கிறார் அந்தச் சிவகணம்.வாஸ்து புருஷன் எனப்படும் சிவகணத்திற்கு சிவனருள் கிடைத்த தலம் இதுவாகும். சொந்த மனை, வீடு வாங்க நினைக்கும் அன்பர்கள், இங்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, அம்பாளையும் ஸ்வாமி யையும் பிரார்த்தித்தால், விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி.
சொந்த வீடு என்றதும் எல்லோருடைய நினைவிலும் வருவது சிறுவாபுரி முருகன்தான். ராமாயண காலத்தில், ராமருக்கும் லவ குசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது. அருணகிரிநாதர் போற்றி வணங் கிய ஆலயம் இது. சொந்தவீடு வேண்டும் என விரும்புவோர், சிறுவாபுரிக்குச் சென்று முருகனுக்கு அர்ச்சனை செய்து, உள்ளம் உருக வழிபட்டு வந்தால், விரை வில் சொந்த வீடு கனவு நனவாகும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது மேல்பொதட்டூர். இங்கே, பூமிதேவி சமேதராக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதரணி வராகர். சாந்த சொரூபனாக காட்சி அருள்கிறார், இந்த வராகப் பெருமான். தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் இந்தத் தலத்துக் குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வராக மூர்த்தியை வழிபட்டு வந்தால், பூமி தொடர்புடைய பிரச்னைகள் நீங்கும், சனி தசை மற்றும் சனி தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும், திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை
சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சோி செல்லும் சாலையில், உள்ள மரக்காணம் அருள்பாலிக்கும் பூமீஸ்வரர் வீடு வாங்கும் யோகத்தை வழங்குகிறார். சிவனடியார் ஒருவரின் பக்திக்கு மெச்சி, மரக்கால் படியில் உறைந்தும் மறைந்தும் திருவிளையாடல் புரிந்து, பின்னர் பூமியி லிருந்து வெளிப்பட்ட ஸ்வாமி இவர். ஆகவே இவரை வழிபட்டால், நிலம் தொடா் பான பிரச்சினைகள் நீங்கி சொந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.
ஒத்தக் கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்திருக்கிறது இந்தக்கோயில். ஆலயத்தில் பாலமுருகன், பத்ரகாளியம்மன் மற்றும் பாலகணபதிக்குச் சந்நிதிகள் உள்ளன. கல்யாணம் வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு வந்து முருகனை மனமுருக வேண்டினால் விரைவில் வேண்டுதல் பலிக்கும். அதேபோல் செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டிக்கொண்டால், விரை வில் சொந்த வீடு யோகம் அமையும்.