Astrology September 13: இன்றைய ராசி பலன்.! 3 ராசிகளுக்கு பணம் குவியும்.! 4 ராசிகளுக்கு இன்று ராஜயோகம்.!

Published : Sep 13, 2025, 07:29 AM IST

இன்றைய ராசி பலன்கள் பல சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டுள்ளன. காதல், தொழில், நிதி, குடும்பம் என வாழ்க்கையின் பல அம்சங்களிலும் மாற்றங்கள் நிகழும். சில ராசிகளுக்கு அனுகூலமான நாளாகவும், சில ராசிகளுக்கு சற்று கவனம் தேவைப்படும் நாளாகவும் அமையும்.

PREV
112
மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று காதல் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் காண முடியும். தனித்து இருக்கும் இளம் பெண்கள், இளைஞர்களுக்கு தகுந்த இணையை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் அன்பும் புரிதலும் நிறைந்த உறவு நிலவும். ஆனால் தனிப்பட்ட வேலைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாததால் சிறு சோர்வு ஏற்படலாம். சில நேரங்களில் மன அழுத்தமும் உருவாகலாம். தொழிலில் முன்னேற்றம் காண முயற்சிக்கவும். நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைத் தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம்.

212
ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, உங்கள் எதிர்காலத் திட்டங்களை செயல்படுத்த சிறந்த நாள். புதிய முதலீடுகள், வேலை தொடர்பான முடிவுகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். இருப்பினும், இன்று உங்கள் நடத்தையிலும் பொறுமையிலும் கவனம் தேவை. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்; பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்படினும், சமரச மனப்பாங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

312
மிதுனம்

மிதுனம் ராசி நேயர்களே, இன்று நல்ல சிந்தனைகளும் திட்டமிட்ட முயற்சிகளும் பலன் அளிக்கும். மனக்கவலைகள் நீங்கி மன அமைதி பெருகும். கூட்டம் அதிகமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மீகத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்வது மனநிறைவை அளிக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்காவிட்டாலும், நிலைமைச் சீராக இருக்கும். உடல்நலம் சாதகமாக இருக்கும்.

412
கடகம்

கடக ராசி நேயர்களே இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதிக ஓட்டமும் பணி சுமையும் இருந்தாலும் உங்கள் திறமை மற்றும் நம்பிக்கையால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். கிரக நிலை உங்களுக்கு சாதகமாக உள்ளது. இருப்பினும் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பில் தீவிரம் செலுத்துவது அவசியம். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியை தரும்.

512
சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்று நிறைவுபெறாத வேலைகளை முடித்து வைக்க ஏற்ற நாள். நிதி விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியான முறையில் சர்ச்சைகளை தீர்க்கவும். உங்கள் திட்டங்களை யாரிடமும் பகிர வேண்டாம். சுற்றுப்புற மாற்றங்களால் உடல்நிலையில் சிறு சிரமம் ஏற்படலாம்.

612
கன்னி

கன்னி  ராசி நேயர்களே, இன்று நிதி நிலை மேம்பட்டு வருமானத்தில் உயர்வு காணப்படும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியைத் தரும். கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகும். இணையம் மற்றும் மொபைல் சாதனங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் நல்ல உறவு நிலவும்.

712
துலாம்

துலாம் ராசி நேயரக்ளே, புதிய திட்டங்களை தொடங்குவதற்கு இன்று சிறந்த நாள். இளைஞர்களுக்கு கல்வி, வேலை, போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்; அதுவே வெற்றிக்கான வழி. சொத்து, வாகனம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் அன்பும் ஒற்றுமையும் நிறைந்த உறவு நிலவும்.

812
விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் குறிக்கோள்களை அடைய முழு முயற்சி செலுத்துங்கள்; வெற்றி நிச்சயம். தொழில், கல்வி, வேலை ஆகியவற்றில் முன்னேற்றம் கிடைக்கும். இருப்பினும் அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கவும். வெளிநாடு தொடர்பான பயணங்களை இன்று ஒத்தி வைப்பது நல்லது. அரசியல் தொடர்பானவர்களிடம் பேசும்போது கவனம் தேவை.

912
தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்று உறவினர்களைச் சந்திப்பது உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரும். சோம்பல் மற்றும் கோபத்தைத் தவிர்த்து செயல்படுங்கள். சிக்கனமாகச் செலவழிக்கவும். தொழிலில், வியாபாரத்தில் வரும் முடிவுகளை அமைதியாக யோசித்து எடுப்பது நன்மை தரும். குடும்பத்தினருடன் நல்ல நேரம் கழிக்கலாம்.

1012
மகரம்

மகர ராசி நேயர்களே, இன்று அரசியல் மற்றும் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சமூகப் பணிகளில் ஈடுபட்டு, குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். நீதிமன்ற வழக்குகள் இருப்பின் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. வியாபாரத்தில் நேர்மையுடன் செயல்படுங்கள். கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விரைவில் சமரசம் ஏற்படும்.

1112
கும்பம்

கும்ப ராசி நேயர்களே, மாணவர்கள் கல்வியிலும், தொழிலிலும் நல்ல கவனம் செலுத்துவார்கள். வாகனம் வாங்குவதற்கு இது சாதகமான நாள். வெளிநாட்டவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நல்ல காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுங்கள். போட்டியாளர்களின் செயல்களில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

1212
மீனம்

மீன ராசி நேயர்களே, நல்லவர்களுடன் பழகுவதால் உங்கள் சிந்தனையில் நல்ல மாற்றங்கள் உருவாகும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களின் அன்பு அதிகரிக்கும். மதியம் சில எதிர்பாராத செய்திகள் வருத்தத்தை ஏற்படுத்தலாம். சுற்றுப்புற மாற்றங்கள் உடல்நிலையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Read more Photos on
click me!

Recommended Stories