Astrology செப்டம்பர் 5 இன்றைய ராசிபலன்கள்: மேஷ ராசி நேயர்களே உங்கள் காட்டில் பணமழை.! கடன் வசூலாகும்.!

Published : Sep 05, 2025, 08:18 AM IST

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமும், சுறுசுறுப்பும் நிறைந்த நாளாக அமையும். முடங்கியிருந்த வேலைகள் முன்னேற்றம் அடையும், மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.

PREV
12
மேஷ ராசி பலன் – செப்டம்பர் 5

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் நிறைந்த நாளாக அமையும். நீண்ட நாட்களாக முடங்கியிருந்த சில வேலைகள் இன்று முன்னேற்றம் அடையும். உங்களது முடிவெடுக்கும் திறமை மற்றவர்களுக்கு நம்பிக்கையை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் செய்யும்வர்கள் புதிய ஆர்டர்கள், புதிய தொடர்புகள் மூலம் லாபம் அடைவீர்கள்.

பிரச்சினை காணாமல் போகும்

குடும்பத்தில் சின்னசின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், நீங்கள் அமைதியாக பேசினால் பிரச்சினை சுலபமாகத் தீரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இளைஞர்கள் புதிய வாய்ப்புகளை நோக்கிச் செல்லும் நாள். போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கவனம் சிதறாமல் இருந்தால் நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு உண்டு.

22
நிதி நிலமை உச்சத்து செல்லும்

பணவாய்ப்பில் முன்னேற்றம் தென்பட்டாலும், தேவையில்லாத செலவுகளை குறைக்க வேண்டும். இன்று வாகன ஓட்டத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு வீட்டு வேலைகள் எளிதில் நிறைவேறும். தெய்வ ஆராதனையில் ஈடுபட்டால் மனநிம்மதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள்

அதிர்ஷ்ட உடை: பஞ்சு சட்டை அல்லது சல்வார்

முதலீடு: நீண்டகால சேமிப்பு திட்டங்களில் ஈடுபடலாம்

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

மொத்தத்தில், இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் வெற்றி தரும் நாள்.

Read more Photos on
click me!

Recommended Stories