Astrology: செப்டம்பர் 5, இன்றைய ராசி பலன்.! தொழில், காதல், குடும்பம் - இப்படித்தான் இருக்கும்.!

Published : Sep 05, 2025, 12:01 AM IST

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் கலவையான பலன்களைத் தருகின்றன. மீன ராசிக்கு மிகச் சிறந்த நாளாகவும், மேஷ ராசிக்கு சாதகமான நாளாகவும், விருச்சிக ராசிக்கு சவாலான நாளாகவும் அமையும்.

PREV
112
மேஷம் (Aries)

மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு மிகச் சாதகமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த வேலை வாய்ப்பு, வியாபார ஒப்பந்தம் போன்றவை உங்களுக்கு சாதகமாக  அமையும். குடும்பத்தில் இருந்த எல்லா பிணக்குகளும் தீர்ந்து மனநிம்மதி ஏற்படும். தொழில்  மற்றும் வியாபாரத்தில் உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும். வெளியூர்  மற்றும் வெளிநாட்டு பயணங்கள் லாபகரமாக அமையும். கடன் தொடர்பான சிக்கல்கள்  காணாமல் போகும். சுகாதாரத்தில் சிறிய சோர்வு இருக்கலாம். ஓய்வு எடுப்பது நல்ல பலனை தரும். பால்ய நண்பர்கள் தரப்பில் நல்ல செய்தி வரும். மாணவர்கள் உழைப்பால் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைப்பர்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

முதலீடு: தங்கத்தில் முதலீடு நல்லது.

பரிகாரம்: சிவபெருமானை பாலபிஷேகம் செய்து வழிபடவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

212
கன்னி (Virgo)

கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தொழில் மற்றம் வியாபாரத்தில் உங்களது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷ நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் தீர்ந்து காணாமல் போகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் நல்ல ஆதரவு கிடைக்கும். மன நலம் மற்றும் உடல்நலம் சீராக இருக்கும். வெளிநாட்டு தொடர்பான வாய்ப்புகள் கதவை தட்டும். மாணவ மாணவிகள் தங்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு புதிய வாகனம், வீடு, நிலம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள்  அனைத்தும் முயற்சிகளும் வெற்றியடையும்.

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

முதலீடு: நீண்ட கால முதலீடு பயன் தரும்.

பரிகாரம்: விநாயகருக்கு துருவ மல்லிகைப் பூ அர்ப்பணிக்கவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

312
விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சவாலான நாள். தொழிலில் சில இடையூறுகள் வந்து உங்களை தொல்லைப்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பானவர்களுடன் சண்டையைத் தவிர்க்கவும். நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். மாணவர்கள் தங்கள் குறைகளை சீர்செய்தால் முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உழைப்பால் நல்ல முடிவுகள் வரும்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

முதலீடு: தங்கம் தொடர்பான முதலீடு நல்ல பலன் தரும்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சனீஸ்வரன்

412
துலாம் (Libra)

துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பணியிடம் மற்றும் தொழிலில் உங்களது சுமை அதிகரிக்கும். சிலரின் விமர்சனம் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். இருந்தபோதிலும் உங்களது முயற்சிகள் வெற்றியை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் நலத்தில்  சோர்வு இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். மாணவ மாணவிகள் கவனமாக இருந்தால் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அன்பானவர்களுடன் தவறான புரிதலை தவிர்த்தால் நிம்மதி  கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

முதலீடு: நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

பரிகாரம்: துர்க்கைக்கு ஆரத்தி எடுத்துப் பூசனை செய்யவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை

512
கும்பம் (Aquarius)

கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். தொழிலில் புதிய பொறுப்புகள் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அன்பானவர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டு தொடர்பான முயற்சிகள் பலன் தரும். சுகாதாரத்தில் சின்ன சோர்வு மட்டும் இருக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

முதலீடு: பங்கு முதலீடு நல்ல பலன் தரும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் நிவேதனம் செய்யவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சனி பகவான்

612
மீனம் (Pisces)

மீன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு மிகச் சிறந்த நாள். தொழிலில் நீண்ட நாள் காத்திருந்த முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் வரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலை அடைவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உடல்நலம் சீராக இருக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உங்களுக்கு மன அமைதி தரும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

முதலீடு: தங்கத்தில் முதலீடு நல்லது.

பரிகாரம்: விஷ்ணுவுக்கு துளசி தண்டு சமர்ப்பிக்கவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

712
தனுசு (Sagittarius)

தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு நல்ல பலன் தரும் நாள். தொழிலில் உங்களுக்கு உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். நண்பர்களின் உதவியால் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவு அதிகரிக்கும். சுகாதாரத்தில் சிறிய பிரச்சினைகள் வரலாம்.மாணவர்கள் தங்கள் முயற்சிக்கு வெற்றி பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்பு உண்டு. ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

முதலீடு: நிதி சேமிப்பு திட்டங்களில் முதலீடு நல்லது.

பரிகாரம்: அன்னபூரணி அம்மனை வழிபடவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அன்னபூரணி

812
சிம்மம் (Leo)

;சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பலத்த சோதனைகள் ஏற்படும். தொழிலில் உழைப்புக்கு தாமதமாகவே அங்கீகாரம் கிடைக்கலாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். உடல் நலத்தில் சளி, இருமல் போன்றவை வரும். மாணவர்கள் அதிக உழைப்புடன் இருக்க வேண்டியது அவசியம். 

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

முதலீடு: பங்கு சந்தை முதலீடு கவனமாக செய்யவும்.

பரிகாரம்: சூரியனுக்கு தண்ணீர் அர்ப்பணிக்கவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன்

912
கடகம் (Cancer)

கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மனதிற்கு நிம்மதி தரும் நாள். நீண்ட நாட்களாக இருந்த குடும்பப் பிரச்சினைகள்  காணாமல் போகும். அன்பானவர்களிடமிருந்து எதிர்பாராதவகையில் பரிசு கிடைக்கலாம். தொழிலில் உங்களது முயற்சிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்து வைத்திருந்த பணம் லாபத்தை தரும். பண வரவு அதிகரிக்கும் போதிலும் செலவுகளும் இருக்கும். உடல்நலத்தில் சிறிய சோர்வு, வயிற்று பிரச்சினை வரலாம் என்பதால் உணவில் எளிமையை பின்பற்றவேண்டியது அவசியம். மாணவர்கள் இன்று போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வாய்ப்புகள் உண்டு. உங்களை நம்பியவர்கள் உங்களுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் நிற்பார்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

முதலீடு: சேமிப்பு திட்டங்களில் முதலீடு நல்ல பலன் தரும்.

பரிகாரம்: தேவியிடம் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காமாட்சி

1012
மிதுனம் (Gemini)

மிதுன ராசி நேயர்களே, இன்று உங்கள் மனதில் இருந்த சந்தேகங்கள் தெளிவாகும் நாள். தொழில் வியாபாரத்தில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். உங்களது பேச்சுத் திறன் மூலம் பலரையும் கவர்ந்து இழுப்பீர்கள்.  திடீர் பண வரத்து மகிழ்ச்சி தரும். வெளிநாட்டு தொடர்பான முயற்சிகள்  சாதகமான பலனை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நெருக்கமானவர்களுடன் சச்சரவு ஏற்படாமல் கவனமாக இருங்கள். வியாபாரிகள் தங்கள் பங்குதாரர்களுடன் புரிதலுடன் நடந்துகொள்வது மிகவும் அவசியம். மாணவர்கள் தங்கள் குறைகளை சீர்செய்தால்  கற்றலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

முதலீடு: பங்கு சந்தையில் சற்றே முன்னேற்றம் காணலாம்.

பரிகாரம்: விஷ்ணுவுக்கு துளசி மாலை சமர்ப்பிக்கவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு

1112
ரிஷபம் (Taurus)

ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சற்று கலவையான பலன்களை கொடுக்கும். வேலைப்பளு அதிகரிக்கும் நிலை ஏற்படும். சிலரின் இடங்களில் அங்கீகாரம் கிடைக்கும். சிலரிடம் இருந்து விமர்சனங்கள் வந்து சேரும். இருந்தாலும் உங்களது பொறுமையும் கடின உழைப்பும் இன்று வெற்றியையும் லாபத்தையும் தேடி தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். பணவரவு  மிதமாக இருக்கும் என்ற போதிலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் இரத்த அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சினைகள் வரலாம். வாகன ஓட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். மாணவ மாணவிகள் கவனமாக இருந்தால் நல்ல முடிவு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

முதலீடு: நிலம் தொடர்பான முதலீடு பயனுள்ளதாக இருக்கும்.

பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி

1212
மகரம் (Capricorn)

மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சற்று சோதனை நாள். தொழிலில் சிக்கல்கள் வரும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம்; கவனமாக இருங்கள். நண்பர்கள் தரப்பில் ஆதரவு குறையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரலாம். இருந்தாலும் உங்களது முயற்சி வெற்றி தரும். பண வரவு குறைந்திருக்கும். உடல்நலத்தில் மூட்டு வலி, தலைவலி போன்றவை வரலாம். மாணவர்கள் அதிக உழைப்புடன் இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உங்களுக்கு மனநிம்மதி தரும்.

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

முதலீடு: தற்காலிக முதலீடு தவிர்க்கவும்.

பரிகாரம்: விநாயகருக்கு புலி எருக்கு மலர் சமர்ப்பிக்கவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

Read more Photos on
click me!

Recommended Stories