பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரும் கணவன் நல்ல குணமுடனும், வசீகரமான தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அந்த வகையில் ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே வசீகரமான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களது குணம், கிரகம் மற்றும் உள்ளார்ந்த பண்புகளால் இது தீர்மானிக்கப்படுகின்றது. எனவே எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் அழகான ஆண்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
25
மார்ச்
ஜோதிடத்தின் படி, மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் வசீகரமான தோற்றமும், கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் ரொம்பவே தைரியம் உடையவர்களாகவும், சாகச உணர்வு கொண்டவர்களாகவும் மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் பயமில்லாத வாழ்க்கையை வாழ்வார்கள். இயற்கையாகவே இவர்கள் வசீகரமானவர்களாக இருந்தாலும் இவர்களது தன்னிச்சை மற்றும் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் கூடுதல் அழகை இவர்களுக்கு சேர்க்கும். இவர்களது மிகப்பெரிய வசீகனம் எதுவென்றால் அவர்களது தைரியம் தான் என்று ஜோதிடம் சொல்கிறது.
35
மே
ஜோதிடத்தின்படி, மே மாதம் பிறந்த ஆண்கள் வசீகரத்தின் உச்சமாக இருப்பார்களாம். இவர்கள் எப்போதும் தங்கள் அழகாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்களாம். மேலும் இவர்கள் பொறுமையான மற்றும் உறுதியான ஆளுமை கொண்டிருப்பார்கள். இயற்கையாகவே இவர்கள் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் பெற விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களின் வசீகரமான தோற்றம் நேர்மை, வலிமை, ஆளுமை, அப்பாவித்தனம் போன்ற அனைத்தாலும் இவர்களை கவர்ச்சிகரமான நபராக மாற்றுகிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஜோதிடத்தின் படி , ஆகஸ்ட் மாசம் பிறந்த ஆண்கள் மிகவும் அழகான உடல் தோற்றம் மற்றும் கம்பீரமாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் ரொம்பவே ஆதிக்கம் செலுத்தும் நபராக இருப்பார்கள். இயற்கையாகவே இவர்களின் வலிமையான உடல் அமைப்பு, உறுதியான சுயமரியாதை காரணமாக இவர்கள் தலைமை பதிவை வகிப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணிடம் அரச அந்தஸ்தும், வசீகரமான தோற்றமும் இருப்பதால் இவர்களை வசீகரத்தின் ராஜாவாக காட்டுகிறது என்கிறது ஜோதிடம்.
55
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே கம்பீரமானவர்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. இவர்கள் நேர்த்தியானவர்கள் மற்றும் நாகரீகமனவர்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு விஷயமும் ரொம்பவே தனித்துவமாக இருக்கும். இவர்களிடம் கவர்ச்சிகரமான பேச்சுதிறன் இருப்பதால் அவர்களது வசீகரத்தை இன்னமும் மேம்படுத்துகிறது இதனாலே இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் அழகான ஆண்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.