நவக்கிரகங்களில் அதிக நன்மைகளை தரக் கூடிய கிரகம் குரு பகவானா? சனி பகவானா?

Published : Aug 18, 2025, 06:16 PM IST

Jupiter vs Saturn Which Planet Gives More Benefits : நவக்கிரகங்களில் முக்கியமான கிரகங்களான குரு மற்றும் சனி கிரகங்களில் அதிக நன்மைகளை தரக் கூடிய கிரகம் எது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
நவக்கிரகங்களில் அதிக நன்மைகளை தரக் கூடிய கிரகம் குரு பகவானா? சனி பகவானா?

ஜோதிட சாஸ்திரப்படி, நவக்கிரகங்களில் குரு பகவானும், சனி பகவானும் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் தரும் நன்மைகள் முற்றிலும் வேறுபட்டவை. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். மேலும் குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் பலன் அதிகம் என்று கூட ஜாதக ரீதியாக சொல்வது உண்டு. அந்தளவிற்கு ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் சாதகமான இடத்தில் இருந்தால் நல்ல பலனையே தருவார். குப்பையிலிருந்தவரை கோபுரத்திற்கு கொண்டு சென்றுவிடுவார். அப்படிப்பட்ட பலனை தரக் கூடியவர் தான் குரு பகவான்.

26
குரு பகவான் (வியாழன்)

நன்மை தரும் கிரகம்: ஜோதிடத்தில், குரு பகவான் முழுமையான சுப கிரகமாகக் (Benefic Planet) கருதப்படுகிறார். அவர் ஒருவரின் அதிர்ஷ்டம், செல்வம், திருமணம், குழந்தை பாக்கியம் மற்றும் ஞானத்திற்கு அதிபதி. மேலும், ஜோதிடத்தில் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி இந்த குரு பகவான் தான். இந்த இரு ராசியினரைச் சேர்ந்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டாலோ அல்லது திருமணம் செய்து கொண்டாலோ அவர்களது வாழ்க்கை ஜாம் ஜாமுன்னு இருக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. அதற்கு முக்கிய காரணம் குரு பகவான் தான்.

36
குருவின் பலன்கள்:

குருவின் பார்வை எந்த ஒரு பாவ ஸ்தானத்தின் மீதும் பட்டாலும், அதன் தீய விளைவுகளைக் குறைத்து நன்மைகளைத் தருவார். குருவின் பலன்கள் உடனடியாகக் கிடைக்கக்கூடியவை, ஆனால் அவை ஒருவருடைய கர்மாவைப் பொறுத்து மாறுபடும்.

46
சனி பகவான்

நீதிமான்: சனி பகவான் நீதிக்கும், நியாயத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அதிபதி. அவர் ஒருவரை சோதனைகளுக்கு உட்படுத்தி, அதன் பிறகு நற்பலன்களை வழங்குவார். ஒருவரை ஏழரை ஆண்டு காலம் பிடித்து அதில், அவருக்கு நல்ல பாடங்களை கற்றுக் கொடுப்பார். பொதுவாக சனி பகவான் நல்லவர்களை ஒன்றும் செய்யமாட்டார். இதுவே நல்லவற்றிற்கு மாறாக என்னெல்லாம் செய்கிறார்களோ அவர்களை தான் சனி பகவான் தொந்தரவு செய்வார்.

56
சனி பகவான் பலன்கள்:

சனி தரும் பலன்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. அவை ஒருவரின் கடின உழைப்பு, பொறுமை மற்றும் நேர்மை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அவர் சோதனைகளைத் தந்தாலும், அதன் மூலம் ஒருவருக்கு நிரந்தரமான வெற்றியையும், ஞானத்தையும், நிலையான செல்வத்தையும் வழங்குவார்.

66
குருவா? சனி பகவானா? யாருடைய பலன் சிறந்தது?

குரு பகவான் ஒரு அன்பான அரசர் போல, தன் அருளை உடனடியாக வாரி வழங்குவார். அவரது பலன்கள், குறுகிய காலத்தில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் தரும்.

சனி பகவான் ஒரு கண்டிப்பான ஆசிரியர் போல, மாணவனை சோதித்த பிறகு மட்டுமே நல்ல மதிப்பெண்களை வழங்குவார். அவர் தரும் பலன்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.

எனவே, குறுகிய காலத்தில் நன்மை தருபவர் குரு பகவான். ஆனால், கர்ம வினைகளுக்கு ஏற்ப, நிலையான, நிரந்தரமான நன்மைகளையும், வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தருபவர் சனி பகவான். இருவரின் பலன்களும் வெவ்வேறானவை, ஆனால் இரண்டும் ஒருவருக்கு வாழ்க்கையில் தேவைப்படும் முக்கியமான விஷயங்களாகும். இந்த 2 கிரகங்களும் ஒருவருக்கு சாதகமான இடங்களில் அமைந்துவிட்டால் அவர்கள் தான் உலகத்திலேயே கோடீஸ்வரர்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories