ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையான நண்பர்களாக இருப்பார்களாம். அவர்கள் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
மனிதர்களாகிய நம் அனைவருக்கும் இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான குணம் விசுவாசம் தான். அதுவும் குறிப்பாக துணை மற்றும் நண்பர்களிடம் இந்த குணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக எந்த சூழ்நிலையிலும், உறுதுணையாக நின்று அன்பு மற்றும் ஆதரவை வழங்குபவர்களே உண்மையான நண்பர்களாவார்கள். ஆனால் அந்த கொடுப்பினை அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.
ஆனாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் உண்மையான நண்பர்களாக இருப்பார்களாம். அவர்கள் தங்கள் நண்பர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கலாம். எனவே இந்த பதிவில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையான மற்றும் விசுவாசமான நண்பர்களாக இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
25
ஏப்ரல்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஏப்ரல் மாசம் பிறந்தவர்கள் விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் நட்பு விஷயத்தில் பாறை போல உறுதியாக இருப்பார்களாம். நண்பர்களுக்கு தேவை இருக்கும் போதெல்லாம் தயக்கம் இன்றி தாராளமாக உதவி செய்வார்களாம். முக்கியமாக இவர்கள் தங்கள் நண்பனின் வெற்றியை தனது வெற்றி போல கொண்டாடி மகிழ்வார்களாம். இவர்கள் தங்கள் நண்பர்களை ஒருபோதும் கைவிடவே மாட்டார்களாம். நட்பின் உறவை ரொம்பவே மதிக்கக் கூடியவர்கள் இவர்கள்.
35
ஜுலை
ஜோதிடத்தின்படி, இவர்கள் நட்பு உறவில் உறுதியாக இருப்பார்களாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்களது நண்பர்களை பாராட்டுவதையும், மதிப்பதையும் விரும்புவார்கள். நண்பர்களுக்காக நேரம் மற்றும் அன்பை தாராளமாக கொடுப்பார்கள். எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலைகளை வந்தாலும் இவர்கள் தங்களது நண்பர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். இந்த குணத்தால் இவர்களது நட்பு வட்டாரம் நீண்ட நாள் நிலைத்திருக்கும்.
ஜோதிடத்தின்படி, அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் ரொம்பவே இரக்க குணமுள்ளவர்கள். இவர்கள் அனைவர் மீதும் அக்கறையாக இருப்பார்கள். பிறரது உணர்வுகளை எளிதில் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வார்கள் முக்கியமாக இவர்கள் தங்கள் நண்பர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். அவர்களுக்காக எப்போதும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். நண்பர்களுக்கு தேவைப்படும்போது உதவி மற்றும் ஆதரவை வழங்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு நண்பர்களாக கிடைத்தால் அவர்களது நம்பிக்கை மட்டும் சம்பாதித்து விடுங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் உங்களுக்கு விசுவாசமான நண்பர்களாக இருப்பார்கள்.
55
நவம்பர்
ஜோதிடத்தின்படி, நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உறவில் ரொம்பவே விசுவாசமானவர்களாக இருப்பார்களாம். இவர்கள் நட்பில் அதிக உண்மையாக இருப்பார்களாம். அதை தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் யாருடன் நட்பு கொள்கிறார்களோ அவர்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பார்கள். நண்பருக்காக எதையும் செய்ய துணிவார்கள். சொல்ல போனால் அவர்களது நம்பிக்கையை நீங்கள் சம்பாதித்து விட்டால் உங்களுக்காக உயிரை கொடுக்க கூட அவர்கள் தயங்க மாட்டார்களாம்.