Astrology ஆகஸ்ட் 28: மிதுன ராசிக்கான இன்றைய பலன்.! காதல் கைகூடும்.! அமைதி காத்தால் அல்வா கிடைக்கும்.!

Published : Aug 28, 2025, 06:20 AM IST

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சுத்திறமை, புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம், பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும்.

PREV
14
மிதுனம் (Gemini): புதிய திட்டங்களை தொடங்கலாம்

இன்று பேச்சுத் திறமை மற்றும் புத்திசாலித்தனம் உங்களை முன்னேற்றம் அடையச் செய்யும். தொழிலில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும்.புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்கலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். பணத்தை சிக்கனமாக சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் பயன் அளிக்கும்.

24
கருத்து வேறுபாடுகள் தீரும்.!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். கணவன்–மனைவிக்கிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், ஆனால் விரைவில் தீரும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் காணலாம். இளைஞர்கள் நேர்முக தேர்வில் வெற்றி பெறுவர். பயணத்தால் நல்லது நடக்கும்.

34
கைகொடுத்து உதவும் நட்பு.!

நண்பர்கள் மற்றும் சமூக வட்டத்தில் புதிய வாய்ப்புகள் தோன்றும். பயணங்கள் லாபம் தரும். மாணவர்களுக்கு வெற்றிகரமான நாள். தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். உறவினர்கள் உதவி கேட்டு தொடர்பு கொள்வர். நண்பர்கள் உதவி செய்வர். காதல் கைகூடும்.! அமைதி காத்தால் அல்வா கிடைக்கும்.!

44
சாதனை படைக்கும் நாள்.!

இன்றைய நாள் உங்கள் பேச்சு மற்றும் அறிவாற்றலால் வெற்றியைப் பெறும். திட்டமிடல் மற்றும் நேர்த்தியான செயல்பாடுகள் முக்கியம். அமைதியாக இருந்தால் சாதிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30–12:30 பரிகாரம்: துர்கையை வணங்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories