Astrology: ஆக.14-ல் சுக்கிரன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம்.! இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!

Published : Aug 13, 2025, 12:04 PM IST

ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிர பகவான் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் முக்கியமான யோகம் ஆகும். இது ஆகஸ்ட் 14 2025 உருவாக்க உள்ளது. இது மூன்று ராசிகளுக்கு மிகுந்த நன்மைகளை தர உள்ளது.

PREV
15
சுக்கிரன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம்

கிரகங்களின் சஞ்சாரமும், அவை உருவாக்கும் யோகங்களும் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த வகையில் சுக்கிரன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் முக்கியமான யோகம் விளங்குகிறது. வேத ஜோதிடத்தின் படி இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் 45 டிகிரி தொலைவில் அமையும் பொழுது அர்த்தகேந்திர யோகம் உருவாவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 14, 2025 அன்று சுக்கிரன் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் இந்த சிறப்பு கோணத்தில் இணைவதால் அர்த்தகேந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகமானது கிரகங்களின் ஆற்றலை தனித்துவமான வகையில் செயல்படுத்தி பல்வேறு ராசிகளுக்கு வெவ்வேறு விதமான பலன்களை வழங்க உள்ளது. சுக்கிரன் அழகு, செல்வம், காதல் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாக விளங்குகிறார். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், மூன்று ராசிகள் இதனால் மிகப்பெரிய அளவில் பலனடைய உள்ளனர்.

25
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர யோகம் தொழில் மற்றும் நிதி வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை உருவாக்கும். கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் செய்த தொடர் முயற்சிக்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக யாத்திரைகள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது பொறுமையுடன் நிதானித்து, யோசித்து செயல்பட வேண்டும். இல்லையெனில் சிறு சிக்கல்கள் ஏற்படலாம். நிதி நிலைமை மிகவும் சிறப்பானதாக இருக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படலாம்.

35
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பல துறைகளில் நல்ல மாற்றங்களை தரவுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். தொழிலில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுப்பெறும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக இந்த காலம் மிகவும் செழிப்பானதாக இருக்கும். எதிர்பாராத வருமானங்கள் கிடைக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் நீண்ட காலம் நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல புரிதல் உருவாகும். இந்த யோகமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான புதிய கதவுகளை திறக்கும்.

45
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர யோகம் வாழ்க்கையில் பல பகுதிகளிலும் நன்மைகளை வழங்க உள்ளது. சுக்கிரன் மற்றும் யுரேனஸ் இணைந்து உருவாக்கும் இந்த யோகமானது கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வ வளத்தையும் உறவுகளில் மகிழ்ச்சியும் தரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகள் மேலும் வலுப்பெறும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் உருவாகும். தொழில் ரீதியாக இந்த காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கலாம். நிதிநிலைமை மேம்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. மேலும் முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்க உள்ளது. இந்த யோகம் 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளை தரும் என்றாலும் மேற்கூறப்பட்ட மூன்று ராசிகளுக்கு மிகுந்த நன்மைகளை தரவுள்ளது.

55
பிற ஆலோசனைகள்

இந்த யோகத்தால் பலனடையும் ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது ஆழமாக யோசித்து அவசரப்படாமல் செயல்பட வேண்டும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் பொழுது அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். சுக்கிரனுக்கு உகந்த பரிகாரங்களை செய்ய வேண்டும். குடும்ப உறவுகளையும், காதல் உறவுகளையும் பலப்படுத்துவதற்கு இந்த காலம் மிகவும் உகந்தது. மேற்கூறப்பட்ட பலன்கள் பொதுவானவை. ஒவ்வொருவரின் ஜாதகம் மற்றும் கிரக நிலைகளைப் பொறுத்து இவை மாறுபடலாம். முழு பலனை பெறுவதற்கு அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது. இந்த தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories