Astrology. சூரிய பகவான் உருவாக்கும் ஆதித்ய மங்கள யோகம்.! தீபாவளிக்கு முன் கோடீஸ்வரனாகப் போகும் 3 ராசிகள்

Published : Sep 05, 2025, 11:18 AM IST

கிரகங்களின் அதிபதியான சூரியன் துலாம் ராசியில் பிரவேசித்து செவ்வாய் கிரகத்துடன் இணைவதால் ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக மூன்று ராசிகள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெற உள்ளனர். 

PREV
15
ஆதித்ய மங்கள யோகம் 2025

ஜோதிட சாஸ்திரங்களின்படி அக்டோபர் மாதத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல ராசிகள் நன்மை அடைய உள்ளனர். அதில் முக்கியமானதாக சூரியனின் பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. செவ்வாய் துலாம் ராசியில் நுழைய உள்ள நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவான சூரியனும் துலாம் ராசியில் இணைய இருக்கிறார். சூரியன் மற்றும் செவ்வாய் இணைப்பு காரணமாக ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த ராஜயோகத்தால் மூன்று ராசிகள் மிகுந்த பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ஆதித்ய மங்கள யோகம் உருவாகும் நேரம்

கிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி பிற்பகல் 1:53 மணிக்கு கன்னி ராசியை விட்டு வெளியேறி, துலாம் ராசிக்குள் நுழைகிறார். இவர் துலாம் ராசியில் நவம்பர் 16 ஆம் தேதி வரை இருப்பார். அதேபோல் கிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வரை துலாம் ராசியில் இருப்பார். அக்டோபர் 17 ஆம் தேதி செவ்வாய் மற்றும் சூரியன் இணைவால் ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாகிறது.

35
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதித்ய மங்கள ராஜயோகம் மிகுந்த நன்மைகளை தரவுள்ளது. செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை மேஷ ராசியின் ஏழாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த சமயத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் ஆசியும் கிடைப்பதால் இவர்கள் மிகுந்த பலன்களை பெற உள்ளனர். ஆதித்ய மங்கள யோகம் தொழில் மற்றும் வணிகத்தில் மிகப்பெரும் முன்னேற்றத்தை தரும். புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, வணிக விரிவாக்கம் ஆகியவை நடைபெறும். செவ்வாய் உங்கள் ராசியின் அதிபதியாக இருப்பதால் இந்த யோகம் உங்களுக்கு தைரியத்தையும், முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராவதோடு முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

45
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆதித்ய மங்கள யோகம் மிகுந்த நன்மைகளைத் தரும். இந்த ராஜயோகம் ரிஷப ராசியின் ஆறாவது வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் வெற்றியடைவீர்கள். தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். குடும்பத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். குருவின் பார்வையும் இணைவதால், நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். மருத்துவம், பாதுகாப்பு, சட்டம் தொடர்பாக வேலைகளில் இருப்பவர்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட வீட்டில் செவ்வாய் பார்வை உள்ளதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

55
துலாம்

துலாம் ராசியின் லக்னத்தில் ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், நிதி நிலைமை என அனைத்து துறைகளிலும் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பல வழிகளில் சிக்கி இருந்த பணங்கள் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களும் திறக்கப்படும். வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில், நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. ஆரோக்கியம் அபரிமிதமாக மேம்படும்.

(குறிப்பு: இந்த யோகம் பல நன்மைகளை தரும் போதிலும் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகியவை ஆற்றல் மிக்க கிரகங்கள் என்பதால் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் பொறுமையுடன் செயல்படுவது முக்கியம். மேலும் சூரிய பகவானை வழிபடுவது, தியானம் செய்வது, தான தர்மங்களில் ஈடுபடுவது ஆகியவை உங்களுக்கு மேலும் நன்மைகளைத் தரும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஜோதிட கருத்துகள் அடிப்படையிலானது மட்டுமே. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுக வேண்டியது அவசியம்)

Read more Photos on
click me!

Recommended Stories