Study Direction Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி குழந்தைகள் படிக்கும் போது எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
உங்க குழந்தை படிப்புல 'டாப்' ஆக இந்த திசையை நோக்கி படிக்க வைங்க!!
வாஸ்து சாஸ்திரம் இந்து மதத்தில் ஒரு பழமையான அறிவியல்களில் ஒன்றாகும். இதில் சொல்லப்படும் அனைத்து விஷயங்களையும் பின்பற்றினால் வாழ்க்கை சந்தோஷமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் அனைத்து திசைகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது எந்த ஒரு பொருளையும் தவறான திசையில் வைத்தாலோ, அல்லது எந்த ஒரு வேலையும் தவறான திசை நோக்கி செய்தாலோ அது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் உங்கள் குழந்தைகள் படிக்கும் போது எந்த திசையை நோக்கி படிக்க வேண்டும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளன.
24
குழந்தைகள் படிக்கும் போது எந்த திசையை நோக்கி படிக்க வேண்டும்
ஏனெனில், பல சமயங்களில் குழந்தைகள் கடினமாக படித்தும் அவர்களால் எதிர்பார்த்த மதிப்புகளை தேர்வில் பெற முடியாமல் போகிறது. இதற்கு சுற்றி உள்ள சூழலும் ரொம்பவே முக்கியமானது அதாவது குழந்தைகள் அமர்ந்து படிக்கும் இடமும் திசையும் வாஸ்துபடி சரியில்லை என்று அர்த்தம். உண்மையில், பிற விஷயங்களைப் போலவே குழந்தைகள் படிக்கும் திசையும் வாஸ்து சாஸ்திரத்தின் படி நன்றாக இருந்தால் அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அதாவது குழந்தைகள் படிக்கும் திசை வாஸ்துபடி இருந்தால் குழந்தையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, வாஸ்துபடி குழந்தைகள் எந்த திசை நோக்கி அமர்ந்து படிக்க வேண்டும் என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் குழந்தை படிக்கும் போது குழந்தையின் முகம் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தான் இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. ஒருவேளை இவை இரண்டும் இல்லாவிட்டால் வடக்கு திசை நோக்கி குழந்தை படிக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வடகிழக்கு திசையும் படிப்புக்கு சிறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, உங்களது குழந்தையை இந்த திசை நோக்கி படிக்க நீங்கள் வைக்கலாம். இந்த திசையில் உங்கள் குழந்தை படித்தால் குழந்தையின் மூளை வேகமாக வேலை செய்யும் மற்றும் அவர்கள் விரைவாக புரிந்து கொண்டு படிப்பார்கள்.