ரிஷபம் ராசிக்கான மார்ச் மாத ராசி பலன்: தீராத கடன் தீரும்; இனி ராஜா மாதிரி வாழ்க்கை அமையும்!
ஜோதிடத்தில் 2ஆவது ராசியான ரிஷப ராசியினருக்கு மார்ச் மாத ராசி பலனைப் பொறுத்த வரையில் ஒட்டு மொத்தமாக சாதகமான பலனைத் தரும். உங்களுடைய ராசிக்கு அதிபதி சுக்கிர பகவான். அவர், லாப ஸ்தானத்தில் இருக்கும் நிலையில் பொருளாதாரத்தில் உங்களுக்கு சிக்கல் வராது. இதே போன்று இந்த் மாதம் உங்களுடை சொந்த ராசியில் கர்ம ஸ்தானத்தில் தொழில் ஸ்தானத்தின் அதிபதி இருக்கிறார்.
ரிஷபம் ராசிக்கான மார்ச் மாத ராசி பலன்: தீராத கடன் தீரும்; இனி ராஜா மாதிரி வாழ்க்கை அமையும்!
இதனால், வேலையில் கடினமாக உழைக்க வேண்டி வரும் என்றாலும் கூட உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களது கடின உழைப்பிற்கு பாராட்டுகள் கிடைக்கும். புதன் பகவான் உங்களுடைய வியாபாரத்திற்கு காரணமானவர். அவர் பலவீனமாக இருக்கும் நிலையில், வியாபாரத்தில் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் ராசிக்கான மார்ச் மாத ராசி பலன்: தீராத கடன் தீரும்; இனி ராஜா மாதிரி வாழ்க்கை அமையும்!
பெரியளவில் நஷ்டம் எல்லாம் ஏற்படாது. ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். படிக்கும் மாணவர்கள் சனியின் தாக்கம் காரணமாக கூடுதல் பொறுப்புடன் படிக்க வேண்டி வரும். ஒருமுறைக்கு பல முறை திரும்ப திரும்ப படிக்க வேண்டி வரும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கேலி, கிண்டல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 2ஆம் வீட்டிற்கு செவ்வாய் வருவது சண்டையை வரவழைக்கும்.
ரிஷபம் ராசிக்கான மார்ச் மாத ராசி பலன்: தீராத கடன் தீரும்; இனி ராஜா மாதிரி வாழ்க்கை அமையும்!
சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. திருமண விஷயங்களைப் பற்றி பார்க்கையில் நீங்கள் கலவையான முடிவுகளை பெற நேரிடும். காதலர்களுக்கு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். இதே போன்று தான் கணவன் மனைவியும் சண்டைகள் வராமல் தவிர்ப்பது நன்மை அளிக்கும். குரு சந்திரன் யோகத்தால் உழைப்பிற்கு ஏற்ப பலன் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் எந்த பாதிப்பும் வராது. உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.