Vastu Tips : கற்றாழை செடியை வீட்டின் இந்த திசையில் வையுங்கள்...பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும்..!!

First Published | Aug 18, 2023, 1:04 PM IST

கற்றாழை செடி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. எனவே, வாஸ்து சாஸ்திரம் படி, கற்றாழை செடியின் முக்கியத்துவம் மற்றும் அதை வீட்டின் எந்த திசையில் நட்டால்  நன்மைகள் பல கிடைக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

கற்றாழையில் மருத்துவ குணங்கள் உள்ளது என்று நாம் அனைவருக்கும் தெரிந்ததே. எனவே தான் பலர் தங்களது வீடுகளில் துளசி செடியை போலவே, கற்றாழை செடியையும் வளர்க்கிறார்கள். கற்றாழை முகத்திற்கு பளபளப்பைத் தருவது மட்டுமல்லாமல், அதனை வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நட்டால் அதிர்ஷ்டத்தை பன் மடங்கு கொடுக்கும்.

கற்றாழை செடியை வீட்டில் சரியான திசையில் நட்டால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கிறது. அதே சமயத்தில், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியேறி, வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து இருக்கும்.

இதையும் படிங்க:  வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வர கட்டாயம் இந்த வாஸ்து டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..

Tap to resize

வாஸ்து சாஸ்திரத்திரம் படி, கற்றாழை செடியை வீட்டில் வைத்தால், அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும். குறிப்பாக இது உங்கள் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் நீக்க உதவுகிறது.
 

அதுபோல் வாஸ்து படி, கற்றாழை செடியை வீட்டில் சரியான திசையில் நட்டால் பல நன்மைகளை பெறலாம். எனவே, வீட்டின் மேற்கு திசையில் கற்றாழை செடியை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்தால் ஒருவர் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

இதையும் படிங்க: Vastu Tips : வாஸ்து படி இந்த பொருட்களை காரில் வையுங்கள்..விபத்துகள் வராது..!!

மேலும் வீட்டின் தென்கிழக்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம். அதுபோல் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்க நீங்கள் வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட வேண்டும்.

Latest Videos

click me!