உங்கள் வீட்டில் செய்வினை கோளாறு உள்ளதா என்பதை எளிதாகக் கண்டறிய வேண்டுமா? அதற்கு உதவும் 6 முக்கிய அறிகுறிகள் இதோ. உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால், செய்வினை பாதிப்பு இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
மனிதர்களால் பார்க்க முடியாத சில அதிர்வலைகளை விலங்குகள் உணரும். வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது பூனை திடீரென வீட்டின் ஒரு குறிப்பிட்ட மூலையைப் பார்த்து காரணமே இல்லாமல் குரைப்பதோ அல்லது பயந்து நடுங்குவதோ தொடர்ந்தால், அங்கு ஏதோ எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம்.
26
கருகும் துளசிச் செடி!
நீங்கள் எவ்வளவு தான் தண்ணீர் ஊற்றி, பராமரித்தாலும், வீட்டில் உள்ள பச்சைப் பசேல் என்ற செடிகள் (குறிப்பாக துளசி, மணி பிளான்ட்) திடீரென ஒரே நாளில் கருகிப்போவது நல்ல அறிகுறி அல்ல. அது வீட்டில் பரவியிருக்கும் தீய ஆற்றலை உறிஞ்சுவதால் தான் நடக்கும் என்கிறது ஆன்மீகம்.
36
காரணமில்லாத துர்நாற்றம்:
வீட்டை எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும், திடீரென அழுகிய முட்டை வாசனையோ, ஏதோ ஒரு பொருள் கருகிய வாசனையோ அல்லது சுடுகாட்டுச் சாம்பல் போன்ற ஒரு விசித்திரமான துர்நாற்றமோ வீசுகிறதா? துப்புரவு செய்தும் இந்த வாடை நீடித்தால், அது நெகட்டிவ் எனர்ஜியின் உச்சக்கட்ட அறிகுறி!
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்படும். ஆனால் மருத்துவமனைக்குச் சென்று டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் ரிப்போர்ட்டில் எல்லாமே 'நார்மல்' என்று வரும். இந்த விவரிக்க முடியாத சோர்வும், தலைவலியும் செய்வினையின் முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
56
வீட்டில் எப்போதும் சண்டை, பண விரயம் :
அன்பாக இருந்த குடும்பத்திற்குள் திடீரென சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பெரிய சண்டை வெடிக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து, கையில் காசு தங்காமல் ஏதோ ஒரு வழியில் வீண் செலவுகள் ஏற்பட்டு, பணப் பற்றாக்குறை உங்களை வாட்டும்.
66
தூக்கமின்மை மற்றும் கெட்ட கனவுகள்:
இரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள் திடீரென விழிப்பு வருவது, யாரோ நெஞ்சின் மீது உட்கார்ந்திருப்பது போல் மூச்சுத் திணறல் (Sleep Paralysis) ஏற்படுவது, மற்றும் தொடர்ச்சியாக பயங்கரமான கெட்ட கனவுகள் வருவது தீய சக்திகளின் ஆதிக்கத்தைக் குறிக்கும்.