விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மன ரீதியான அழுத்தங்களையும், நிதானத்தையும் சோதிப்பதாக அமையும். தேவையில்லாத மனக் குழப்பங்கள், பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பு குறைந்து, சில தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவலைகள் வரலாம். சிலருக்கு நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, முடிந்தவரை அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. பங்குச்சந்தை மற்றும் பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.